கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே ‘சூரிய மயக்கம்’ பிரச்னையும் தலைகாட்ட ஆரம்பித்துவிடும். சம்மரில் ஏற்படக்கூடிய ‘சன் ஸ்ட்ரோக்‘ (sun stroke) மிகவும் ஆபத்தானது. இதை ‘ஹீட் ஸ்ட்ரோக்’ (heat stroke) என்றும் சொல்லலாம். குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் தான் இந்தப் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
அதிக வெப்பமான இடங்களில் இருக்கக்கூடாது. வெயிலில் விளையாடவோ ஓடவோ செய்தாலோ அல்லது நீண்ட நேரம் வேலை செய்தாலோ உடலிலிருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறும். இதனால், ரத்தத்தில் உள்ள நீர்ச்சத்து குறைந்து, ரத்த ஓட்டம் தடைபட்டு மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய் அடைத்துக்கொள்ளும். இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபருக்கு பக்கவாதம் அல்லது உயிரிழப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
முதலுதவி
‘சன் ஸ்ட்ரோக்’ஆல் ஒருவர் பாதிக்கப் பட்டால், உடலில் வியர்வை இருக்காது. உடல் வெப்பநிலை 104 முதல் 106 வரை உயரும். தலைசுற்றல், குழப்பம், படபடப்பு, மூச்சுத்திணறல், வலிப்பு, சுயநினைவை இழத்தல் உள்ளிட்டவை ஏற்படக்கூடும். பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக தலை முதல் கால்வரை ஆடையுடன் தண்ணீரால் நனைத்து, உடனே மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அழைத்துச் செல்வதற்கு இடைப்பட்ட நேரத்தில், ஐஸ்க்யூபை அக்குள், கழுத்து, தொடையிடுக்கில் வைக்க வேண்டும். இதனால், பாதிக்கப்பட்ட நபரின் உடல் வெப்பநிலை குறைய வாய்ப்பு உண்டு.
இதுவொரு முதலுதவி மட்டுமே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சையளிப்பது மட்டுமே அந்த நபரின் உயிரைக் காப்பாற்றும் வழியாகும். முக்கியமாக, ‘பாராசிடமால்’ போன்ற காய்ச்சல் மாத்திரைகள் வேலை செய்யாது. முயற்சிக்காதீர்கள். வீட்டைச் சுற்றி மரம் நடுவது, வீட்டை எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது, வீட்டிற்குள் நேரடியாக வெயில் விழாதவாறு ஈரத்துணிகளைக் கொடியில் போடுவது, வாசலில் தண்ணீர் தெளிப்பது, நல்ல காற்றோட்டத்துக்கு ஜன்னல்களைத் திறந்துவைப்பது அவசியம். அவசரத்தேவைக்கு 108-ஐ அழைக்க மறக்கவேண்டாம். முதலுதவி பற்றிய தகவல்களுக்கு 104-ஐ தொடர்புகொள்ளுங்கள்.
இவற்றையும் கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள்!
வெயில்காலம் வந்தாலே தாகம் அதிகமாக இருக்கும். அதற்காகக் கிடைத்த இடங்களிலெல்லாம் தண்ணீர் குடிப்பது சரியல்ல. தண்ணீரைக் காய்ச்சி, ஆறவைத்து குடிக்காததால்தான் பெரும்பாலானவர்களுக்கு ‘கிருமித்தொற்று’ எளிதில் பரவுகிறது. காய்ச்சல், வாந்தி, பேதி, வயிற்றுக்கடுப்பு, தலைசுற்றல் ஆகியவைதான் டைபாய்டு, காலராவுக்கான ஆரம்ப அறிகுறிகளாகும்.
வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது, குறைந்தது ஒரு லிட்டர் தண்ணீராவது கொண்டு செல்லுங்கள்.
கையில் குடை எடுத்துச் செல்வது மிகவும் அவசியம். முக்கியமாக, பெண்களை வெயிலிலிருந்து காப்பது மட்டுமல்ல திருடர்களிடமிருந்தும் குடையானது பாதுகாப்பு தரும். எலுமிச்சை ஜூஸ், தர்பூசணி ஜூஸ் , முலாம்பழ ஜூஸ், இளநீர், நுங்கு, பதநீர், நன்னாரி சர்பத் உள்ளிட்டவையும் வெயில்காலத்தில் பருக ஏற்றவைதான். ஆனால், கரும்பு ஜூஸ், பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம் உள்ளிட்டவை தாகத்தை மேலும் அதிகப்படுத்தவே செய்யும். கவனம்!
ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை, தாட்பூட் (passion fruit), டிராகன் ஃப்ரூட், ஆப்பிள், சப்போட்டா, அன்னாசி, வெள்ளரி உள்ளிட்டவற்றை ஜூஸாக குடிக்காமல், அப்படியே சாப்பிடுவது நல்லது. காரணம், அவற்றிலுள்ள நார்ச்சத்தானது உடலையும் குடலையும் ஆரோக்கியமாக வைக்க உதவும். வெயில் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் மேற்சொன்னவற்றை முழு பழமாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
வியர்க்குரு, வேனல்கட்டி, தோல் வறட்சி ஆகியவை வராமல் தடுக்க, தினசரி இருமுறை குளிக்கவேண்டும். முகம், கை, கால்களை நீரால் அடிக்கடி கழுவவேண்டும். சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்கவேண்டும். நம் உடலிலிருந்து வெளியேறும் சிறுநீரின் அளவைவிட, 500 மி.லி அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். வெப்பத்தை உட்கிரகிக்கும் பாலியஸ்டர், ஸ்வெட்டர், கம்பளி ஆடைகளை அணியக்கூடாது. பருத்தி ஆடைகள், வெளிர்நிற ஆடைகள் அணிவதுதான் மிகவும் நல்லது.