சினிமா

கார் ஓட்டுநரால் நடிகர் பாபி சிம்ஹாவிற்கு வந்த புதிய சிக்கல்.. நடந்தது என்ன?

குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் புஷ்பராஜை போலீசார் கைது செய்தனர்.

கார் ஓட்டுநரால் நடிகர் பாபி சிம்ஹாவிற்கு வந்த புதிய சிக்கல்.. நடந்தது என்ன?
கார் ஓட்டுநரால் நடிகர் பாபி சிம்ஹாவிற்கு வந்த புதிய சிக்கல்.. நடந்தது என்ன?
சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் முத்துசாமி (42). இவர் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஜி.எஸ்.டி., சாலை வழியாக கத்திப்பாரா மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அதே வழியாக பின்னால் வேகமாக வந்த பென்ஸ் கார் ஒன்று முத்துசாமி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பின்னர் இரண்டு பைக், ஆட்டோ, கார் என அடுத்தடுத்து ஐந்து வாகனங்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் சரவணன் (32), மேற்கு கே.கே.நகரை சேர்ந்த சுந்தர் ராஜ் (59), குரோம்பேட்டை புருஷோத்தமன் நகரைச் சேர்ந்த ஆராதனா (30) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், விபத்தை ஏற்படுத்திய கார் பிரபல நடிகர் பாபி சிம்ஹாவின் கார் என்றும் அதை ஒட்டி வந்த டிரைவர் பெரம்பலுார் கழனிவாசலையைச் சேர்ந்த புஷ்பராஜ் (39) என்பது தெரியவந்தது. மேலும் புஷ்பராஜ் குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து,புஷ்பராஜ், ரத்தப் பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நடத்திய பரிசோதனையில் அவர் குடிபோதையில் இருப்பது உறுதியான நிலையில் புஷ்பராஜ் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.