சேகர்பாபு பேசிய உரையாடல்
கடந்த மார்ச் 24ஆம் தேதி கீழ்பாக்கத்தில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் துப்புரவு பணியாளர்கள் போல வந்த பலர் வீட்டில் கழிவுநீரை ஊற்றி அராஜக செயலில் ஈடுபட்டனர். இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், ஐந்து பேரை கைது செய்து அவர்களை ஜாமினில் விடுவித்தனர்.இந்த நிலையில் இவ்வழக்கு விசாரணைக்காக யூடியூபர் சவுக்கு சங்கர் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகினார்.
சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற விசாரணை நிறைவுக்கு பின் வெளியே வந்த சவுக்கு சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தனது வீட்டில் தாக்குதல் நடத்திய வழக்கில் வாக்குமூலம் அளிப்பதற்காகவும், ஆதாரங்களை தெரிவிக்கவும் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக தெரிவித்தேன். கூடுதலாக அமைச்சர் சேகர்பாபு பேசிய உரையாடலை சிபிசிஐடி போலீசாரிடம் சமர்பித்துள்ளேன்.
சிபிஐக்கு மாற்ற வேண்டும்
ஆனால் சிபிசிஐடி இந்த வழக்கை சரியான முறையில் விசாரணை செய்யும் என துளியும் தனக்கு நம்பிக்கையில்லை எனவும் முக்கிய நபராக பார்க்கக்கூடிய வாணி ஸ்ரீ விஜயகுமாரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்தபோதிலும் இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும் வீடியோவில் உள்ள பல பேர் இன்னமும் காங்கிரஸ் போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர் என குற்றஞ்சாட்டி உள்ளார். இந்த வழக்கில் முக்கிய நபர்களில் தொடர்பு இருப்பதால் சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள், தான் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர் சேகர்பாபு கொளத்தூர் தன்ராஜ் என்பவருடன் தனது வீட்டில் நடந்த விவகாரம் தொடர்பாக பேசியபோது, சேகர்பாபு அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் பேசும்போது சந்தேகம் இருப்பதாகவும், ஆதலால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் இந்த விசாரணை உரிய முறையில் நடத்தப்படும்.
சகாயத்திற்கு பாதுகாப்பில்லை
சட்டப்பேரவையில் இவ்வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டதாக கூறிய முதல்வர், நான்கு நிமிடத்தில் ஜாமினில் வெளியே வந்தது தொடர்பாக தெரியவில்லை, நிலுவையில் உள்ள பல வழக்குகளை சட்டப்பேரவையில் பேசிய முதல்வர், இவ்வழக்கில் பேச பதில் இல்லை என்பதால் வழக்கு நிலுவையில் இருப்பதால் பேச விரும்பவில்லை என கூறியதாக குற்றஞ்சாட்டினார்.
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் சகாயம் தனக்கு பாதுகாப்பில்லை என கூறும் நிலைக்கு ஆளாகி இருப்பதால், எந்தளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு உள்ளது என நினைத்து பாருங்கள் என அவர் கேள்வி எழுப்பினார்.