தமிழ்நாடு

தங்கம் விலை சற்றே குறைந்தது.. எவ்வளவு தெரியுமா?

கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

தங்கம் விலை சற்றே குறைந்தது.. எவ்வளவு தெரியுமா?
Gold Price dropped slightly
கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, இன்று (செப். 24) சற்று குறைந்துள்ளது.

நேற்று (செப். 23) ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.85,120 என்ற புதிய உச்சத்தை எட்டியிருந்தது. இந்த நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களால் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

நேற்றைய விலை உயர்வு

கடந்த 22 ஆம் தேதி அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.83,440-க்கு விற்பனையானது. நேற்று காலை, ஒரு சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.84,000-க்கு விற்பனையானது. தொடர்ந்து, மதியத்தில் மீண்டும் ஒரு சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.85,120 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது.

தங்கம் விலை நிலவரம்

இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.84,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.40 குறைந்து, ரூ.10,600-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.150-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ1.50 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்தது உள்ளிட்ட காரணங்களால் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்தச் சிறிய விலை குறைவு, வாடிக்கையாளர்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.