தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு, ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்த நிலையில், இதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் ஆளுநரின் செயல் சட்ட விரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் வைத்திருந்த 10 மசோதாக்களுக்கும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது. மேலும், முதல்முறையாக மசோதா மீது முடிவு எடுக்க ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு காலக் கெடு விதித்தும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்த நிலையில் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “உதகையில் வரும் 25, 26ஆம் தேதிகளில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்றும், பல்கலைக் கழக வேந்தராக ஆளுநரே தொடர்கிறார் எனவும் தெரிவித்துள்ளது. துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டும் அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, துணை வேந்தர்கள் மாநாடு நடத்த ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்றும், கடந்த மூன்று ஆண்டுகளாக உதகையில் துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தி வருகிறோம் எனவும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
இதற்காக துணை வேந்தர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கும் ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அதேநேரம் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட நிலையில், ஆளுநரின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.