உலகம்

Chat gpt-க்கு 'நன்றி' சொல்பவரா நீங்கள்..? கொந்தளித்த சிஇஓ

சாட் ஜிபிடி-யிடம் 'Thanks', 'Please' போன்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம் என்று Open Ai சிஇஒ ஷாம் ஆல்ட்மேன் வலியுறுத்தியுள்ளார்.

Chat gpt-க்கு 'நன்றி' சொல்பவரா நீங்கள்..? கொந்தளித்த சிஇஓ
Chat gpt-க்கு 'நன்றி' சொல்பவரா நீங்கள்..? கொந்தளித்த AI சிஇஓ
தற்போதைய காலக்கட்டத்தில் மக்கள் பெரும்பாலும் ஏஐ (AI) தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கி விட்டனர். தங்களது வேலைகளை சுலபமாக்குவதற்காக ஏஐ-யை பயன்படுத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் பெரும்பாலான தொழிற்சாலைகளில் பணி செய்வதற்கு மனிதர்களுக்கு பதிலாக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் என்ன என்று பலர் யோசித்து வருகின்றனர்.

சமீபத்தில் கிப்லி (Ghibli) ஏஐ புகைப்படங்கள் ட்ரெண்டானதைத் தொடர்ந்து சாட் ஜிபிடி (Chatgpt) ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் பயனாளர்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சாட் ஜிபிடியிடம் (Chat Gpt) பயனாளர்கள் 'Thanks', 'Please' போன்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம் என்று Open Ai சிஇஒ சாம் ஆல்ட்மேன் (Sam altman) வலியுறுத்தியுள்ளார்.

கோடிக்கணக்கில் மின்சார செலவு

ஆல்ட்மேன் தனது சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் நெட்டிசன்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, பயனர்களின் மரியாதை நிமித்தமான செய்திகளுக்கு பதிலளிப்பதற்காக, ஓபன்ஏஐ எவ்வளவு செலவு செய்து இருக்கும் என ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு, “பல்லாயிரக்கணக்கான டாலர்கள் நன்றாக செலவிடப்படுகின்றன. அவை உங்களுக்கு ஒருபோதும் தெரியாது” என பதிலளித்துள்ளார்.

பயனர்களின் செயல்பாடுகளுக்கு பதிலளிக்கும் வகையில் தான் சாட்ஜிபிடி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால், நீங்கள் ‘Thanks', 'Please' போன்ற சொற்களை பயன்படுத்தும் போது அதற்கும் சாட்ஜிபிடி மின்சாரத்தை செலவிட்டு பதிலளிக்கும். இந்த தேவையற்ற உரையாடல்களால் மின்சாரத்திற்கு கோடிக்கணக்கில் பணம் (டாலர்) செலவாவதாக ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.