தமிழ்நாடு

தமிழக அரசு உழைப்பை சுரண்டுகிறது- உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

"ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது" என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

 தமிழக அரசு உழைப்பை சுரண்டுகிறது- உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!
Supreme Court condemns
நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக, ஒப்பந்த செவிலியர்களுக்கும் தொகுப்பூதியம் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று சுஉச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

உச்சநீதிமன்றத்தின் முக்கிய கருத்துகள்

வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசின் சார்பில், மத்திய அரசிடமிருந்து உரிய பணம் கிடைக்காததால் ஒப்பந்த செவிலியர்களின் ஊதியம் நிலுவையில் உள்ளது என வாதிடப்பட்டது.

இதனைக் கடுமையாக மறுத்த உச்சநீதிமன்றம், "ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசைக் குறை சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள்" என்று தெரிவித்தது.

மேலும், "ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு. அதை எக்காரணம் கொண்டும் தட்டிக்கழிக்க முடியாது. இலவசங்களுக்கு கொடுக்க பணம் இருக்கிறது, ஆனால் பணி செய்பவர்களுக்குத் தர பணம் இல்லையா?" என்றும் தமிழக அரசுக்குச் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இறுதியாக, இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் செவிலியர் சங்கம் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து, உச்சநீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.