எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில்...
கோபியில் தனியார் நிறுவன திறப்பு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “சிறந்த கல்வியை தரக்கூடிய ஆண்டாக, அனைவரும் மகிழ்ச்சியோடு வாழுகிற ஆண்டாக இந்த ஆண்டு அமைந்திட வேண்டும்.
நமது பகுதி மேன்மேலும் வளர வேண்டும் என்ற வாழ்த்துகளையும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் சிறந்த முறையில் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் முனைப்பாக இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இபிஎஸ் பெயர் தவிர்ப்பு
கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி அன்னூரில் நடைபெற்ற அத்திகடவு அவினாசி திட்ட விவசாயிகள் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், எம்,ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம் பெறவில்லை என்று நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் புறக்கணித்ததை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே பனிப்போர் நடந்து வந்தது.
அதைத்தொடர்ந்து செங்கோட்டையன் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் எடப்பாடி போட்டோவிற்கு இணையாக செங்கோட்டையன் படமும் இடம் பிடித்தது. அதேபோன்று எடப்பாடி பழனிசாமி குறித்தும், அவரது 4 ஆண்டு கால ஆட்சி குறித்தும் பேசுவதை தவிர்த்து வந்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் பொதுச்செயலாளர் என்று மட்டும் பேசி வந்தார். இந்நிலையில் இன்று கோபியில் நடைபெற்ற தனியார் நிறுவனம் துவக்க விழாவில் கலந்து கொண்ட கே.ஏ.செங்கோட்டையன், மீண்டும் இபிஎஸ் பெயரை தவிர்த்துள்ளார்.
அதிமுக பாஜக கூட்டணி
நேற்று தனியார் கல்வி நிறுவன ஆண்டு விழாவிலும், அதிமுக, பாஜக கூட்டணி குறித்து எந்த கருத்தும் கூறாமல் சென்ற செங்கோட்டையன், இன்று மீண்டும் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசுவதை தவிர்த்து உள்ளார்.இதனால் மோதல் போக்கு இன்னும் தொடர்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக கடந்த வாரம் நடந்த சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கு முன்னதாக இபிஎஸ் தலைமையில் நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவிர்த்து வந்தார்.
இதைத்தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு உள்ளிட்ட காரணங்கள் அதிமுகவில் உட்கட்சி பூசல் இருப்பதாக பேசப்பட்டது. ஆனால் அதன்பின்னர் அதிமுக மூத்த தலைவர்களின் சமாதானத்தை அடுத்து அதிமுக உறுப்பினர்களுடன் நெருக்கம் காட்டினார்.
அதிமுகவில் பரபரப்பு
குறிப்பாக ’யார் அந்த தியாகி’ என்ற வாசகத்துடன் கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தது உள்ளிட்டவற்றை அதிமுக உறுப்பினர்களுடன் இணைந்து செய்தார்.இந்த நிலையில், கோபியில் நடந்த நிகழ்ச்சியில் இபிஎஸ் பெயரை செங்கோட்டையன் மீண்டும் தவிர்த்துள்ளது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.