தமிழ்நாடு

ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தரை கைது செய்ய வேண்டும்...யூடியூபர் திருச்சி சாதனா கண்ணீர் மல்க புகார்

தனது மகள்கள் மற்றும் கணவர் குறித்து அருவருக்கதக்க வகையில் வீடியோ வெளியிடும் சூர்யா மற்றும் சிக்கந்தர் மீது நடவடிக்கைகள் எடுக்க கோரி யூடியூபர் திருச்சி சாதனா கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்து விட்டு கண்ணீர் மல்க பேட்டி

  ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தரை கைது செய்ய வேண்டும்...யூடியூபர் திருச்சி சாதனா கண்ணீர் மல்க புகார்
ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் மீது திருச்சி சாதனா புகார்
கரூர் மாவட்டம், நங்கவரத்தை அடுத்த நச்சலூரை சார்ந்தவர் சாதனா. திருச்சி சாதனா என்ற பெயரில் டிக்டாக் செயலி மூலம் பிரபலமானவர்.கொரோனா காலத்தில் அது தடை செய்யப்பட்ட பின்னர், பேஸ்புக், இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப் என வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

திருச்சி சாதனா கண்ணீர் மல்க புகார்

திருச்சி சாதனா யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவருக்கும் டிக்டாக்கில் பிரபலமான ரவுடி பேபி சூர்யா என்ற சுப்புலட்சுக்கும் அடிக்கடி ஆன்லைனில் சண்டை வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

திருச்சி சாதனா தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி சாதனா , ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் மீது புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தனது புகழுக்கும், கெளரவத்திற்கும் பங்கம் விளைவிக்கும் வகையிலும், தனது 2 பெண் குழந்தைகள் குறித்தும் ஆபாசமாகவும், அருவருக்கதக்க வகையில் மதுரையை சார்ந்த சுப்புலட்சுமி என்கின்ற ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் ஆகியோர் வீடியோக்களை சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.இதனால் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இருவரும் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை” என கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.