புழுதி காற்றுடன் மழை
கடந்த சில நாட்களாக சென்னையில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் வெயில் காய்ந்து வந்த நிலையில், மதியத்திற்கு மேல் வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகளான ஆவடி, குன்றத்தூர், பட்டாபிராம் உள்பட பல்வேறு இடங்களில் புழுதி காற்றுடன் மழை பெய்தது. பல்லாவரம், பம்மல், பொழிச்சலூர், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் அனைத்து பகுதிகளிலும் மின் தடை ஏற்பட்டுள்ளது.
இடி மின்னலுடன் மழை
சென்னையில் கடும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று கத்திரி வெயில் தொடங்குவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மதியத்திற்கு மேல் சென்னை வடபழனி, விருகம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக காற்றுடன் கூடிய மழை பெய்தது.
மேலும் வடசென்னைக்குட்பட்ட எழும்பூர், வேப்பேரி, காசிமேடு, சென்ட்ரல், தண்டையார்பேட்டை, பாரிமுனை, ராயபுரம், திருவொற்றியூர், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்கிறது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.