10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி
கர்நாடக மாநிலம், பாகல்கோட்டில் உள்ள பசவேஷ்வர் ஆங்கில வழி பள்ளியின் மாணவரான அபிஷேக் சோழச்சகுடா, 600க்கு 200 மதிப்பெண்கள் மட்டுமே ( சுமார் 32%) பெற்று, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 6 பாடங்களிலும் தோல்வி அடைந்துள்ளார்.
தேர்வில் தோல்வி அடைந்ததற்காக அவரை பலர் கேலி செய்தாலும், மாணவனின் பெற்றோர் அவருக்கு பக்க பலமாக நின்றனர். மாணவரை திட்டுவதற்கு அல்லது அவமானப்படுத்துவதற்கு பதிலாக கேக் வெட்டி தங்கள் மகனை உற்சாகப்படுத்தியுள்ளனர்.
கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்
“நீ தேர்வில் தோல்வி அடைந்திருக்கலாம், ஆனால் வாழ்க்கையில் தோல்வியடையவில்லை. நீ எப்போதும் மீண்டும் முயற்சி செய்து அடுத்த முறை வெற்றிபெறலாம்” என்று பெற்றோர் அவனிடம் தெரிவித்துள்ளனர்.
பெற்றோரின் ஆதரவால் மிகவும் நெகிழ்ச்சி அடைந்த அபிஷேக், நான் தோல்வியடைந்தாலும், என் குடும்பத்தினர் என்னை ஊக்கப்படுத்தினர். நான் மீண்டும் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்று வாழ்க்கையில் வெற்றி பெறுவேன் என்றார்.