தமிழ்நாடு

Rain Alert: சென்னை, செங்கப்பட்டு உள்பட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Rain Alert: சென்னை, செங்கப்பட்டு உள்பட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!
TN Weather
'டிட்வா' புயல் வலுவிழந்த பின்னரும் தொடர்ந்து சென்னை கடற்கரை அருகே நிலை கொண்டுள்ளதால், கடந்த 48 மணிநேரமாக இடைவிடாத கனமழை பெய்து வரும் நிலையில், இன்றும் (டிசம்பர் 3) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மிக கனமழைக்கான எச்சரிக்கை

வலுவிழந்த 'டிட்வா' புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி மற்றும் கோவை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

கனமழைக்கான எச்சரிக்கை

இவற்றைத் தவிர்த்து, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கடலூர், அரியலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு

நாளை (டிசம்பர் 4) கிருஷ்ணகிரி, தருமபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மழை எப்போது குறையும்?

வலுவிழந்த டிட்வா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை இன்றிரவுடன் நிறைவு பெறும் என்று சுயாதீன வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.