தமிழ்நாடு

கோவையில் பாஜக நடத்திய தேசியக்கொடி பேரணி- அதிமுகவினர் பங்கேற்பு

ஆப்ரேஷன் சிந்து வெற்றியை கொண்டாடும் விதமாக கோவையில் பா.ஜ.க வினர் நடத்திய மூவர்ண கொடி பேரணியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க ஜெயராமன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 கோவையில் பாஜக நடத்திய தேசியக்கொடி பேரணி- அதிமுகவினர் பங்கேற்பு
பாஜக சார்பில் நடந்த தேசியக்கொடி பேரணியில் அதிமுக உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்பு
ஆப்ரேஷன் சிந்து வெற்றியை கொண்டாடும் விதமாக கோவையில் பா.ஜ.க வினர் நடத்திய மூவர்ண கொடி பேரணியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க ஜெயராமன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தியாவில் தொடர்ச்சியாக தாக்குதல்

இந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “இந்தியா போல வளர்ந்து வருகிற எந்த ஒரு நாடும், இதுபோல பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்தது இல்லை. இந்தியா வல்லரசாகி கொண்டு இருக்கிறது. ஒருபுறம் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. இன்னொரு புறம் அருகில் இருக்கக் கூடிய நாடுகள் தங்கள் நாட்டினுடைய, நிலத்தை தங்கள் நாட்டின் ஆதரவை இந்தியாவை நோக்கி குறி வைத்து இருக்கக் கூடிய இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு கொடுக்கக் கூடிய அடைக்கலம் மற்றும் ஆதரவால், இந்தியா தொடர்ச்சியாக தாக்குதல்களை சந்தித்துக் கொண்டு வருகிறது.

இதற்கு முன்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் அதே பாராளுமன்ற தாக்குதல்களாக இருக்கலாம் , மும்பை வெடிகுண்டு தாக்குதலாக இருக்கலாம், இதுபோல ஆயிரக்கணக்கான இந்தியர்களை, நம்மைப் போன்று பலி கொடுத்த வேற எந்த நாடும் இருக்க முடியாது. ஆனால் ஒவ்வொரு முறையும் இதுபோல சம்பவங்கள் நடக்கும் போது, இந்திய அரசு என்பது பல்வேறு உலக நாடுகளிடம் அல்லது ஐக்கிய நாடுகள் சபையிலே தங்கள் குரலை எழுப்புவதோடு, தங்கள் தகவலை பகிர்ந்து கொள்வதோடு இல்லாமல் அதை மாற்றிக் காட்டியவர், பிரதமர் மோடி.

பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்

நம் ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலாகட்டும், நம் நாட்டிலே தமிழ்நாட்டு தாக்குதலாகட்டும், எந்த விதமான மத தாக்குதல்கள் நடந்தாலும் அவர்களுக்கு இடம் கொடுக்காமல், தமிழகத்தில் கோயம்புத்தூரில் அதிகமாக ஒரு அரசியல் கட்சியும் இயக்கமும், தங்களுடைய தொண்டர்களை மத பயங்கரவாதத்திற்கு பலியாக்கி இருக்கிறது என்றால் அது நம்முடைய இயக்கம் மட்டும் தான். அப்படி தமிழ்நாட்டில் தேசிய புலனாய்வு முகமை மூலம், நமக்கெல்லாம் பாதுகாப்பினை கொடுத்து இந்த நாட்டை அரண் போல காத்துக் கொண்டு இருக்கிற பிரதமர் நரேந்திர மோடி. பஹல்காமில் நடந்த சம்பவத்தை, மிகச் சரியாக கணிக்கப்பட்டு துல்லியமாக திட்டமிடப்பட்டு எங்கெல்லாம் பயங்கரவாத முகாம்கள் இருந்ததோ, அங்கெல்லாம் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

எந்த பெண்களைப் பார்த்து நீ மோடியிடம் சொல் ! என்றார்களோ அதே பெண்ணினத்தை வைத்து இதோ உங்கள் பயங்கரவாத முகாம்களை தாக்குகிறோம் என்று முடிவெடுத்தார் மோடி. உலகில் பல்வேறு நாடுகள் பெண்களுக்கு உலகில் முக்கியத்துவம் கொடுக்கிறோம் சம நிலைப்படுத்துகிறோம் என்றெல்லாம் கூறுகிறார்கள், ஆனால் மிக முக்கியமான ஆபரேஷனிலே அதுவும் இஸ்லாமிய வீர பெண்மணியை தன்னுடைய ஆபரேஷனில் முக்கிய அதிகாரியாக நியமித்து எப்படி ? இஸ்லாமியர்களும் இந்த நாட்டினுடைய பாதுகாப்பிற்காக வேலை செய்ய முடியும் என்பதை காட்டி இருக்கிறோம்.


உலக மக்களுக்கான நிகழ்ச்சி

பல்வேறு செய்திகளை இந்த ஆப்ரேஷன் சிந்தூர் மற்ற நாடுகளுக்கு சொல்கிறது. எந்த காரணம் கொண்டும் இந்த நாட்டில் இருக்கிற குடிமக்களின் உயிரையும், உடமையையும் நாங்கள் பாதுகாப்போம் என்ற செய்தி பலமாக சொல்லப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்ல எங்களுடைய ராணுவ நடவடிக்கைகள் என்பது இன்று வளர்ந்து கொண்டு இருக்கிற அனைத்து நாடுகளுக்கும் ஈடுகொடுக்கும் விதமாக, அத்தனை விதமான ராணுவ தளவாடங்களையும் மிகச் சரியான நேரத்தில் பயன்படுத்த முடியும் என்பதை நம்முடைய ராணுவம் காட்டி இருக்கிறது. அதற்கு மேலாக உலக நாடுகளுடைய பார்வையை நம் இந்தியா பக்கம் திரும்பி இருக்கிறது.ஆப்ரேஷன் சிந்தூர் உலக நாடுகளுக்கு இந்தியா பயங்கரவாதத்தை எப்படி ? எதிர்கொண்டு இருக்கிறது என்பதற்கு உதாரணமாக இருக்கிறது. இந்த ஆப்ரேஷன் சிந்தூர் மூவர்ண கொடி யாத்திரை, நாடு முழுவதும் நடந்து கொண்டு இருக்கிறது. ஆப்ரேஷன் சிந்தூர் என அழகான பெயரிட்டு இருக்கிறார் மோடி.

திலகம் என்பது மங்களகரமான வார்த்தை மட்டுமல்ல அது ஒரு வாழ்க்கையை குறிக்கக் கூடிய சக்தி. மிகச் சரியாக இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டு சிந்தூர் நடத்தப்பட்டு இருக்கிறது. இதைப் பற்றி மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய நாடு பாதுகாப்பான தலைவர்கள் கையில் இருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்திய ராணுவம் நமக்காக நல்ல செயல்களை செய்து கொண்டு இருக்கிறது என்பதை உணர வைப்பதற்காக இந்த யாத்திரை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இது தனிப்பட்ட பா.ஜ.க வின் நிகழ்ச்சி அல்ல. இது உலக மக்களுக்கான நிகழ்ச்சி. இந்த நேரத்தில் இந்தியர் என்ற உணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.