மதுரையில் இந்து முண்ணனி சார்பில் முருகன் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் அதற்கான அலுவலகத்தை மதுரை வண்டியூர் பகுதியில் மதுரை ஆதீனம் ஹரி ஹர தேசிக பராமாச்சியர் திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தற்போது தமிழகத்தில் இருக்கும் ஆட்சியை குறித்து நான் குறை கூற முடியாது என்று கூறினார்.
நெல்லையில் நேற்று நடைபெற்ற சம்பவம் வருத்தமாகவுள்ளதாகவும், அரசை நாம் குறை சொல்ல முடியாது என்று கூறியுள்ளார். இன்றைய இளம்தலைமுறையினர் கெட்டுப் போவதற்கு காரணம் ஆசிரியர்கள் மட்டுமல்ல ; பெற்றோர்கள் குழந்தைகளை கண்டித்து வளர்க்க வேண்டும் அதிகமாக கண்டித்தால் மாணவர்கள் தற்கொலை செய்து விடுகிறார்கள் இதற்கு காரணம் சினிமா தான் என்றார்.
மேலும் சினிமாவில் அனைத்து வன்முறைகளையும் காட்டுவதால் தான் மாணவர்கள் அதை உள்வாங்கிக் கொள்கிறார்கள். அரசு சினிமாவை வரைமுறை செய்ய வேண்டும் குறிப்பாக வன்முறை , சண்டை காட்சிகள் கொலை போன்ற காட்சிகள் சினிமாவில் தான் அதிகம் வருவதால் வன்முறை சம்பவங்கள் வரக்கூடிய திரைப்படங்களை அரசு தடை செய்ய வேண்டும் என்றார்.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஆன்மிகம் இல்லை என்ற கேள்விக்கு? அதற்கு காரணம் சினிமா முகத்தில் தான் இன்றைய இளைஞர்கள் இருக்கிறார்கள் அதை திருத்த முடியாது என்று தெரிவித்தார்.
நாங்கள் ஒரு காலத்தில் இருந்தோம் தேசபக்தி குறிப்பாக பக்தி படங்களை பார்த்து வந்தோம் தற்போது அப்படி இல்லை கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற நிலையில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பார்த்து சட்டையை கிழித்துகொள்கிறார்கள், தோடு போடுகிறர்கள் , தாடி வைக்கிறார்கள் நடிகரை பார்த்தே வளர்கிறார்கள் என்றார்
மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்வதற்கு தான் சினிமா சிவாஜி கணேசன் எப்பேர்ப்பட்ட நடிகர் அவரை அரசியலில் பெரிதாக வளர முடியவில்லை மக்கள் நடிப்பை தான் பார்க்கிறார்களே தவிர அரசியலுக்கு வந்தாலும் எடுபடாது என் கருத்து இதுதான்.
சினிமாவும் அரசியலும் விடுபட்டது ஒருவருக்கு மட்டும் தான் அதை எம்ஜிஆர்க்கு மட்டும்தான் மக்களுக்கு வாரி வழங்கியவர் அதனால் தான் அவர் மக்களிடத்தில் பேசப்பட்டார் அவர் போல் யாரும் வர முடியாது
அரசியலில் துணிச்சலில் நம்பர் ஒன் ஜெயலலிதா மட்டும் தான், நான் காஞ்சிபுரத்தில் இருந்தபோது அவருடைய வாகனங்களை நிறுத்துவதற்கு இரண்டு இடம்தான் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், எனது மடத்தை கடந்து சென்றபோது நான் வாகனத்தை நிறுத்தினேன் அந்த அம்மாவிடம் சில கோரிக்கைகளையும் வைத்தேன். அதனை செய்து தருவதாக அன்று கூறியிருந்தார்.
அமைச்சர் பொன்முடியுடைய செயல் குறிப்பாக அரசியல்வாதியாக இருப்பவர்கள் எல்லா சமயத்தையும் ஒன்று போல கருத வேண்டும் பிடித்திருக்கோ, பிடிக்கவில்லையோ அரசியல் சட்டப்படி ரகசிய காப்பு உறுதிமொழி ஏற்கும் போது, எல்லா சமயத்தையும் ஒன்றாகதான் கருத வேண்டும் எந்த ஒரு மதத்தையும் இழிவாக பேசக்கூடாது அரசியல் சட்டத்தை மீறுவது போன்று அவருடைய பேச்சு உள்ளதாக தெரிவித்தார்.
எந்த ஒரு மதத்தையும் உயர்வாக பேசியோ தாழ்வாக பேசியோ அடுத்தவர் மதத்தை புண்படுத்தும் விதம் பேசக்கூடாது இது எனக்கு இன்னும் வருத்தத்தை அளிக்கிறது. விபூதிக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு மடம் தான் மதுரை ஆதீனமடம். அரசருக்கு வெப்பநிலை ஏற்பட்டு அரசனை திருத்தி விபூதி அளித்து கூன் பாண்டியனை நின்ற சீர் நெடுமாறன் ஆக்கியது விபூதி தான்.
அமைச்சர் பொன்முடியின் பேச்சு வருத்தமாக தான் இருக்கிறது. அவர் அமைச்சர் பதவியில் இருக்கக் கூடாது அதற்கு முதல்வர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதை முதல்வரிடத்தில் வேண்டுகோள் வைக்கின்றேன்.
வரும் காலங்களில் அனைத்து அமைச்சர்களையும் கூப்பிட்டு எந்த சமயத்தையும் பிறர் மனது புண்படக்கூடிய வகையில் பேசக்கூடாது என்று முதல்வர் அறிவுரை கூற வேண்டும் அதேபோல திமுகவின் பேச்சாளர்களையும் கண்டிக்க வேண்டும்
திராவிடர் கழகம் பேசுகிறார்கள் என்றால் அன்று பெரியார் சொன்னால் நாம் அரசியலில் நிற்கக்கூடாது என்றார். அரசியல் வந்துவிட்டால் அனைத்தையும் அனுசரித்து செல்ல வேண்டும் என்பதால் தான் திராவிடர் கழகமானது அரசியல் கட்சி இல்லை என்று அறிவித்தார்கள்.
அதுபோல திமுக இல்லை இதுபோன்று பேசுகிறீர்கள் என்றால், திராவிடர் கழகம் போல் அரசியலில் நிற்கக்கூடாது என்ன வேண்டுமானாலும் பேசலாமே ஒழிய , அரசியலும் வேண்டும் எல்லாமும் வேண்டும் என்றால் ஆன்மீகத்தை குறைத்து பேசக்கூடாது ஒன்று பெரியார் கட்சியைப் போல தி.க.வை போல இருந்து கொண்டு பேசி செல்லலாம் என்று விமர்சித்தார்.
ஆனால், வாக்கு அரசியல் என்று வந்துவிட்டால் பொதுமக்களின் வாக்குகளை பெற்று நாட்டை ஆள வேண்டும் என்றால் அனைத்து சமயத்தையும் குறிப்பாக பெரும்பான்மையாக இருக்கக்கூடிய சமயத்தை இழிவாக பேசக்கூடாது, என்று பேசினார். தொடர்ந்து, நடைபெறக்கூடிய முருக பக்த மாநாட்டிற்கு 10 லட்சம் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று தெரிவித்தார்.