மோதல் போக்கு
சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அதிமுக நிர்வாகிகள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.அப்போது பேசிய அவர், இன்று ஆட்சியில் உள்ள திமுக மொழிப்பிரச்சனை, ஜாதி பிரச்சனை என ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பிக்கொண்டு, மத்திய அரசோடு மோதல் போக்கை கடைபிடித்து மத்திய அரசை வம்புக்கு இழுப்பதை வேலையாக வைத்துள்ளது. திமுக தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யாமல், தமிழக மக்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் மத்தியில் உள்ள அரசிடம் எந்த நேரமும் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாக கூறினார்.
மேலும் தமிழகத்திற்கான நிதியை முறையாக கேட்டு பெறாமல், தமிழகத்தில் பல பணிகள் பாதியில் நிற்கும் நிலை உள்ளது. ஒரு சாமர்த்தியமான, ராஜதந்திர முதல்வராக ஸ்டாலின் செயல்படாமல் வழிப்போக்கர் போல பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களோடு சண்டையிடுவது, மத்திய அரசை குறை கூறுவது, மொழி பிரச்சனையை தூண்டுவது, தமிழ் என்ற போர்வையில் மற்ற மொழி பேசுபவர்களை இழிவாக பேசுவது, சமுதாய ரீதியாக சண்டைகள் வர காரணமாக இருப்பது, போதை கலாச்சாரத்தை தடுக்காமல் இருப்பது என தமிழகம் சீரழிவை கண்டிருப்பதற்கு திமுக அரசின் நிலையற்ற தன்மையும், தைரியமற்ற போக்கே காரணம் என விமர்சித்தார்.
விவசாயிகள் துன்பப்படுகிறார்கள்
பாஜகவை எதற்காக எதிர்கிறீர்கள் என கேள்வி எழுப்பிய அவர், தமிழகத்தை ஆளும் உரிமையை தமிழக மக்கள் உங்களுக்கு கொடுத்துள்ள நிலையில், தமிழகத்திற்கு வரக்கூடிய நன்மைகளை வாங்கி கொடுக்கின்ற இடத்தில் இருக்கும் திமுக அரசு அதை சரிவர செய்யாமலும், மத்திய அரசு கொடுக்கும் ஆதி திராவிடர் மக்களுக்காக நிதி உள்ளிட்ட கோடிக்கணக்கான பணத்தை முறையாக செலவிடாமல் திரும்பி அனுப்பிவிட்டு பழியை மத்திய அரசின் மீது சுமத்தி திமுக அரசு தப்பிக்க பார்க்கிறது.
இதனை தடுக்க வேண்டும் என்றால் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம் என தெரிவித்து, ஆட்சிக்கு வந்த திமுக இன்று பத்தாயிரம் பேருக்கு கூட வேலை வாய்ப்பு வழங்கவில்லை.திமுக ஆட்சியில் நெசவாளர்கள், விவசாயிகள் துன்பப்படுகிறார்கள், அரிசி பருப்பு என அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. இந்த நிலைக்கு திமுக ஆட்சியாளர்களின் சித்து விளையாட்டுதான் காரணம். திமுக அரசின் நிர்வாக திறமையின்மை காரணமாக ரேஷன் அரிசி கூட கிடைக்காமல் கஷ்டப்பட்டுவருகிறார்கள்.
மக்கள் விழிக்கொள்ள வேண்டும்
எல்லா விதத்திலும் திமுக அரசு தோல்வி கண்டுவிட்டது. திமுக மூழ்கும் கப்பலாக உள்ளதால் மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். மூழ்கும் கப்பலில் இருந்து தப்பி அதிமுக என்ற சிறந்த கப்பலில் பயணிக்க வேண்டும், அனைத்து மக்களையும் பாதுகாப்பாக அழைத்து சென்று பயணத்தை வெற்றியடைய செய்யும், பணியை செய்வோம்” என்று தெரிவித்தார்.