விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மகன் ஆகாஷ் (19) விழுப்புரம் மாவட்டம் அறிஞர் அண்ணா ஆர்ட்ஸ் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த தங்கவேலு என்பவரின் மகள் அபிநயா (19) என்பவரும் அதே கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷூம்- அபிநயாவும் காதலித்து வந்துள்ளார்.
தூக்கில் தொங்கிய காதலன்
கடந்த வாரம் இருவரும் சென்னை பெரம்பூர் ராஜீவ்காந்தி நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளனர். நேற்று இரவு பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஜன்னல் வழியாக பார்த்த போது ஆகாஷ் தூக்கில் தொங்கியபடி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து ஐசிஎப் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஆகாஷ் தூக்கில் தொங்கி நிலையிலும், அபிநயா கண் மற்றும் வாயில் ரத்த காயங்களுடன் வாயில் நுரை தள்ளியவாறு தரையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனே போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவன் - மனைவி என கூறியதால்....
பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கடந்த சில ஆண்டுகளாக ஆகாஷ் - அபிநயா இருவரும் காதலித்து வந்ததும் கடந்த வாரம் காதலர்கள் இருவரும் தங்களது பெற்றோரிடம் கல்லூரி விடுமுறை என்பதால் சென்னையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு இங்கு வந்துள்ளனர்.
பின்னர் இருவரும் கணவன் மனைவி என கூறி வீடு வாடகை எடுத்து தங்கியது விசாரணையில் தெரியவந்தது. அதுமட்டுமின்றி ஆகாஷ் அண்ணன் ஹரிதாஸ் சென்னையில் தங்கி வேலை செய்து வருவதும் அவர் இருவரையும் சென்னைக்கு வரவழைத்து வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்ததும் தெரியவந்துள்ளது.
போலீசார் விசாரணை
மேலும் நேற்று காதல் ஜோடி இடையே தகராறு ஏற்பட்டு ஆத்திரமடைந்த ஆகாஷ் அபிநயாவை அடித்து கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் இரவு பக்கத்து வீட்டு வசிக்கும் ஒருவர் ஜன்னல் வழியாக பார்த்த ஆகாஷ் தூக்கில் தொங்கிபடி இருந்ததை பார்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்து விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் இரு வீட்டார் குடும்பத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்கவில்லை. கதவை உடைத்து பார்த்த போது தான் பெண்ணை கொலை செய்து விட்ட தற்கொலை செய்து கொண்டது தெரிந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடியின் பெற்றோரிடம் விசாரித்த பின்னரே முழுமையாக தகவல் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கணவன் மனைவி என கூறி வீடு வாடகை எடுத்து காதலியை கொலை செய்துவிட்டு கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

LIVE 24 X 7