திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்டதும் அமைச்சர் கே.என் நேருவின் தொகுதியுமான உறையூர் மின்னப்பன்தெரு , பனிக்கன்தெரு, காமாட்சிஅம்மன் தெரு, நெசவாளர் தெரு, காளையன் தெரு உள்ளிட்ட பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி பொது மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான 50-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனைவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நான்கு வயது பெண்குழந்தை மற்றும் லதா, மருதாம்பாள் ஆகிய பெண்கள் என மொத்தம் மூன்றுபேர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் உறையூர் பகுதி முழுவதும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தது. அதேநேரம், மாநகராட்சி அதிகாரிகளோ, அமைச்சரோ இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.வளர்மதி மற்றும் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்நிலையில், இன்று சுப்பிரமணி என்பவர் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி காரணமாக உயிரிழந்தார். ஏற்கனவே மூன்று பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் ஒருவர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.