சபாநாயகர் அனுமதி மறுப்பு
டாஸ்மாக் கடைகளில் ஊழல் நடைபெறுவதைக் குறிக்கும் வகையில் 'அந்த தியாகி யார்' என எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் தமிழக நேற்று சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். மேலும் டாஸ்மாக் ஊழல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.ஆனால் இதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்ததால் அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தாங்கள் சிக்கி உள்ள வழக்குகளில் இருந்து தப்பிக்க காலில் விழுந்தவர்கள் எதிர்க்கட்சியினர் என விமர்சனம் செய்தார். மேலும் முதலமைச்சர் பதவிக்காக காலில் விழுந்தவர் எல்லாம் தியாகி யார் என பதாகை வைத்துள்ளார் என்றும் நொந்து போய் நூடுல்ஸ் ஆன அதிமுக தொண்டர்கள் தான் தியாகிகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். இதனால் பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக உறுப்பினர்கள் ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
டாஸ்மாக் ஊழல்
மேலும் டாஸ்மாக் ஊழல் குறித்து தனது அனுமதி இல்லாமல் காண்பித்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.இதைத்தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “எதிர்க்கட்சி என்ற முறையில் டாஸ்மாக் ஊழல் குறித்து பேச அனுமதி கேட்டும் அனுமதி மறுக்கிறார்கள்.
டாஸ்மாக் வழக்கை வேறு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு உச்சநீதிமன்றம் சென்றது ஏன்? தமிழ்நாட்டில் உள்ள உயர்நீதிமன்றம் நேர்மையான உயர்நீதிமன்றம் என அனைவருக்கும் தெரியும். டாஸ்மாக் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின்படி ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது என சரமாரியாக குற்றம்சாட்டினார்.
கருப்பு சட்டையில் அதிமுகவினர் வருகை
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பேசுவதை சரியாக ஓளிபரப்பு செய்வதில்லை என ஏற்கனவே அதிமுக குற்றஞ்சாட்டியிருந்தது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் நேற்று பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உறுப்பினர்கள் பேச அனுமதிப்பதில்லைஎன குற்றம்சாட்டியிருந்தனர்.
மேலும், சபாநாயகர் அப்பாவுவின் செயலை கண்டிக்கும் வகையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்தனர். அதனால் இன்றைய சட்டப்பேரவை கூட்டம் பரபரப்புடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு
சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டையில் எண்ட்ரி கொடுத்த இபிஎஸ்...எதிர்க்கட்சிகள் பேச அனுமதிப்பதில்லை என குற்றச்சாட்டு
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதி மறுக்கப்படுவதை கண்டிக்கக் கூடிய வகையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்