சென்னையில் அமைச்சர் கே.என்.நேருவின் மகனான பெரம்பலூர் எம்.பி. அருண் நேருவுக்கு சொந்தமான இடங்களிலும், அவரது சகோதரர் கே.என். ரவிச்சந்திரன் தொடர்புடைய TVH குழுமத்திற்கு சொந்தமான கட்டுமான நிறுவனம், கோவையில் உள்ள அவரது சகோதரர் மணிவண்ணன் இல்லத்திலும், திருச்சியில் உள்ள நேருவின் சகோதரர் ராமஜெயலிங்கம் இல்லம் மற்றும் அமைச்சர் கே.என். நேரு இல்லத்திலும், நேற்று (மார்.8) காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
2-வது நாளாக தொடரும் சோதனை
சென்னையில் TVH குழுமத்திற்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் கே.என். நேருவின் மகன் கே. என். அருண் நேருவுக்கு சொந்தமான சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள GSNR Rice Industrial Pvt limited என்ற நிறுவனத்திலும், அவரது சகோதரரான கே.என் ரவிச்சந்திரன் தொடர்புடைய TVH Novella New நிறுவனத்திலும் தொடர்ந்து இரண்டாவது நாளாக தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
TVH நிறுவனம் சென்னை, கோவை, திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. True value home என்ற TVH கட்டுமான நிறுவனம் கோவை திருச்சி சாலை, அவிநாசி சாலை உட்பட பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகிறது.
இதற்கு முன்னர், இந்த நிறுவனங்களில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சோதனையில்,ரூ.100 கோடி பணமும், 90 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. சோதனை முழுமையாக முடிவுற்ற பிறகே எதற்காக சோதனை நடத்தப்பட்டது என்பது குறித்த முழு விரவமும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாடு
அமைச்சர் கே.என். நேரு மற்றும் சகோதரர் வீடுகளில் 2-வது நாளாக தொடரும் ED ரெய்டு..!
அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன், மற்றும் மகன் அருண் நேரு தொடர்புடைய இடங்களில் 2- வது நாளாக அமலாக்கத்துறை சோதனை தொடர்கிறது.