பீகாரில் சிறப்பு திருத்தத்திற்கு பிறகு வரைவு வாக்களர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாக்காளர்கள் நீக்கம்
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பீகார் மாநிலத்தில் சுமார் 7.24 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட்டு டிஜிட்டல் மயமாக்கும் பணி நிறைவு பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகாரில் சிறப்பு திருத்தத்திற்கு முன்பு 7.89 கோடி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிந்தனர். இப்போது 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களில் பெரும்பாலான வாக்காளர்கள் இறந்துவிட்டனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் பீகார் மாநிலத்தில் இருந்து நிரந்தரமாக வெளியேறியவர்கள் கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பீகார் தலைநகர் பாட்னாவில் அதிகபட்சமாக 3.95 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது பீகார் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
சீமான் எதிர்ப்பு
பீகார் மாநிலங்களில் இருந்து வெளியேறிய வாக்காளர்கள் அவர்கள் வசிக்கும் மாநிலத்தில் வாக்காளர் அடையாள அட்டை பெற்று கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சுமார் 6.5 லட்சம் தொழிலாளர்கள் தமிழகத்தில் வாக்குரிமை பெற முடியும்.
தமிழகத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் ஒரு வேலை வாக்குரிமை பெற்றால் அது தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதற்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துனர்.மேலும் தேர்தல் ஆணையத்தின் செயலை கண்டித்து மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும் என சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசியல் பண்பாடு
இந்த நிலையில், காட்பாடி அடுத்த வள்ளி மலையில் நடைபெற்ற மக்கள் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட துவக்க விழாவில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம், தேமுதிக பிரேமலதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முதல்வரை சந்தித்தது குறித்தும் இது கூட்டணியாக மாற வாய்ப்பு உள்ளதா, இதன் பின்னணி குறித்து கேட்டதற்கு, பின்னணியும் இல்லை, முன்னணியும் இல்லை. தலைவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அரசியல் பண்பாட்டுடன் வந்து பார்த்தார்கள் அவ்வளவுதான்.
பீகாரை சேர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழகத்தில் வாக்காளர்களாக சேர்க்க வாய்ப்புள்ளது குறித்து வெளியான செய்தி குறித்து கேட்டதற்கு, அவர்களுக்கு எல்லாம் அவர்கள் ஊரிலேயே வேலை ஏற்படுத்திக்கொடுத்திருந்தால் நம்மூருக்கு வந்திருக்க மாட்டார்கள். இங்க வந்திருக்கிறார்கள் இப்போது என்ன செய்வது என்பது மிகப்பெரிய பிரச்சனை. ஏனென்றால் பீகாரில் உயிரோடு இருப்பவர்களை எல்லாம் இல்லை என போட்டு விட்டார்கள். அந்த மாதிரி நம் ஊரில் போட முடியாது. ஆகையினால் இது நாள்பட்ட பிரச்னை.இதை தலைவர்கள் தான் அணுக வேண்டும்.
தாக்கம் இருக்கும்
வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் தமிழகத்தில் வாக்காளர்களாக மாறும்போது வரும் காலத்தில் தமிழகத்தில் நிச்சயம் அரசியலில் பாதிப்பும் தாக்கமும் இருக்கும்” என தெருவித்துள்ளார்