தமிழ்நாடு

சாட்டை துரைமுருகன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் சுபாஷினி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசியதாக, யூடியூபர் 'சாட்டை' துரைமுருகன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சாட்டை துரைமுருகன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!
சாட்டை துரைமுருகன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு சார்பில் அதன் சட்டக்குழு செயலாளர் வழக்கறிஞர் தேவி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் ஒன்றை கொடுத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அமைப்பின் தலைவர் டாக்டர் சுபாஷினி மற்றும் துணைத் தலைவர் டாக்டர் கண்ணன் நாராயணன் ஆகியோர் தலைமையில் நாங்கள் தமிழ் பண்பாட்டு பணிகளை மற்றும் அகழ்வாராய்ச்சி பணிகளையும், மேற்கொண்டு வருகிறோம். ஆய்வு அறிஞரான டாக்டர் சுபாஷினி மீது சிலர் 2019 ஆம் ஆண்டு முதல் அவதூறு பரப்பி வருகின்றனர். அப்போதைய டிஜிபி திரிபாதியிடம் புகார் அளித்தோம்.

இந்நிலையில் தற்போது சாட்டை துரைமுருகன் என்பவர் சாட்டை youtube பக்கத்தில் அமைப்பின் தலைவர் டாக்டர் சுபாஷினி மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளையும், ஒருமையில் பேசியும் ஆதாரமற்ற அவதூறுகளையும், தமிழக முதல்வரை அவதூறாகவும், தரக்குறைவாக விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜெர்மனிக்கு பயணம் மேற்கொண்டதற்கு உள்நோக்கம் கற்பித்து வெளியிட்ட அந்த வீடியோ வெளியிட்டுள்ளார்.  அமைப்பின் தலைவரை அச்சுறுத்தும் வகையில் சாட்டை துரைமுருகன்  பதிவு வருகின்றனர்.  சாட்டை துரைமுருகன் மீது உடனடியாக சட்டப்படியான நடவடிக்கையை காவல்துறை எடுக்க வேண்டும்" என்று வழக்கறிஞர் தேவி தெரிவித்துள்ளார்.