தமிழகத்தின் உற்பத்தித் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகுறித்து கவலை தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
இந்தியப் பொருட்களின் மீதான வரியை அமெரிக்கா உயர்த்தியுள்ள நிலையில், வர்த்தக நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தக் கடிதத்தில், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம்குறித்து மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளைப் பாராட்டியுள்ள முதல்வர், தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான நிலைப்பாட்டிற்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து பல்வேறு நாடுகளின் மீது வரிகளை விதித்து வருகிறார். குறிப்பாக, இந்தியப் பொருட்கள்மீது கடந்த 2025 ஆகஸ்ட் 6-ஆம் தேதி மேலும் 25 சதவீதம் என மொத்தமாக 50 சதவீத வரியை விதித்தார். இதில், 25 சதவீத வரி அமலுக்கு வந்துள்ள நிலையில், மீதமுள்ள 25 சதவீத வரி ஆகஸ்ட் 30-ஆம் தேதி அமலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டின் வலுவான உற்பத்தித் துறை இதுவரை கண்டிராத ஒரு நெருக்கடியைச் சந்தித்து வருவதாகவும், இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார். எனவே, இந்த விஷயத்தில் பிரதமர் அவசரமாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் தொழில் துறையினருடன் கலந்தாலோசனை செய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்கவும், வர்த்தகத்தை மீட்டெடுக்கவும் மத்திய அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பினை வழங்கும் எனவும் தனது கடிதத்தில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.