ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆட்டோ சவாரி எடுப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, மற்றொரு ஆட்டோ ஓட்டுநரை ஆட்டோவை ஏற்றி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு அரசு வழக்கறிஞர் ஒருவரே காரணம் எனக் கூறி, உயிரிழந்தவரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சவாரி தகராறில் கொலை
ஸ்ரீவில்லிபுத்தூர் தேரடி வீதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில், சக்கரகுளம் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் தி.மு.க. ஆதரவாளர் பொன்ராஜ் இருவரும் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். சவாரி எடுப்பதில் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, கடந்த ஆறு மாதங்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று செந்தில்குமார், பொன்ராஜின் குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று மாலை கற்பக விநாயகர் கோயில் தெரு அருகே செந்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பொன்ராஜ் தான் ஓட்டி வந்த ஆட்டோவை அதிவேகமாக இயக்கி செந்தில்குமார் மீது பலமாக மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட செந்தில்குமார் தலையில் அடிபட்டு சுயநினைவின்றி கிடந்தார். அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக செந்தில்குமாரை அதே ஆட்டோவில் ஏற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், செந்தில்குமார் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல்துறையினர், கொலை வழக்குப் பதிவு செய்து பொன்ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு வழக்கறிஞர் மீது குற்றச்சாட்டு
இந்த நிலையில், உயிரிழந்த செந்தில்குமார் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு வழக்கறிஞர் திருமலையப்பனிடம் வேலை பார்த்து வந்ததாகவும், அப்போது பொன்ராஜால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டதாகவும் அவரது உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த முன்விரோதத்தின் காரணமாக, அரசு வழக்கறிஞர் திருமலையப்பனின் தூண்டுதலின் பேரில் தான் பொன்ராஜ் இந்த கொலையைச் செய்துள்ளார் என்று உறவினர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
உடலை வாங்க மறுத்து போராட்டம்
அரசு வழக்கறிஞர் மீது எந்தவித விசாரணையும், நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காவல்துறையைக் கண்டித்து, செந்தில்குமாரின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு வழக்கறிஞரை கைது செய்ய வலியுறுத்தி, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும், தங்களுக்கு நீதி கிடைக்காமல் உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி, பிணவறை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.