சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனின் 25-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் முதலில் களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே ஆகியோர் 4 ஓவரில் 16 ரன் எடுத்தனர்.
தொடர்ந்து, 4-வது ஓவரில் டேவன் கான்வே 12 ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார். இதையடுத்து, ரச்சின் ரவீந்திரா வெறும் 4 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து, விஜய் ஷங்கர் 29 ரன்னும், திரிபாதி க்ளீன் 16 ரன்னும், அஸ்வின் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தார். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜா, தீப் ஹூடா ஆகியோர் எந்த ரன்னும் எடுக்காமல் ஏமாற்றத்தையே சிஎஸ்கே ரசிகர்களுக்கு தந்தனர்.
16-வது ஓவரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி களமிறங்கியதால் உற்சாகமடைந்த ரசிகர்கள் எப்படியாவது தோனி அணியை காப்பாற்றிவிடுவார் என்ற சந்தோஷத்தில் இருந்தனர். ஆனால், அவர்களுக்கு மீண்டும் ஏமாற்றத்தை அளிக்கும் விதமாக தோனியும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, விளையாடிய துபே-அன்ஷுல் கம்போஜ் ஜோடி 18 ஓவர் முடிவில் 84 ரன் எடுத்தது.
இறுதியாக சிஎஸ்கே 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்தது. துபே 31 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சிஎஸ்கே 104 ரன்னை இலக்காக நிர்ணயித்துள்ளது.