சினிமா

நடிகர் சூரிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்.. வைரலாகும் வீடியோ

நடிகர் சூரி நடிக்கும் ‘மாமன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சூரிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்.. வைரலாகும் வீடியோ
நகைச்சுவை நடிகராக தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் சூரி, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்தார். சூரியின் திரைப்பயணத்தில் இப்படம் திருப்பு முனையாக அமைந்தது. மேலும், இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ’விடுதலை’ திரைப்படத்தை தொடர்ந்து சூரி நடிப்பில் வெளியான ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘விடுதலை 2’ போன்ற படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

’விடுதலை 2’ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சூரி அடுத்ததாக ‘விலங்கு’ வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியன் இயக்கத்தில் ‘மாமன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், பாபா பாஸ்கர் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கும் இப்படத்திற்கு புருஷோத்தமன் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.

’மாமன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன், சூரிக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதாவது, ’மாமன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோவை நடிகர் சூரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.