மத்திய அரசு, 'ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025'-ஐ (Promotion and Regulation of Online Gaming Bill 2025) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றிய நிலையில், பொதுமக்கள் தங்கள் செயலியில் பணம் செலுத்தி விளையாடுவதை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது ட்ரீம்11 நிறுவனம்.
பிசிசிஐ- ட்ரீம் 11 ஒப்பந்தத்தின் மதிப்பு:
இந்திய கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக ட்ரீம்11 நிறுவனம் இருந்தது குறிப்பிடத்தக்கது. 2023-2026 வரை இந்திய கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக இருக்கும் ஒப்பந்தத்தை 44 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 358 கோடி) மதிப்பில் ட்ரீம் 11 பெற்றிருந்தது. தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவினால், ட்ரீம் 11 நிறுவனத்திற்கு பன்மடங்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்திய கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பைத் தொடர முடியாது என்று ட்ரீம் 11 நிறுவனம் பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா இதுக்குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
ட்ரீம் 11- பிசிசிஐ இடையேயான ஒப்பந்தத்தில், அரசாங்க ஒழுங்குமுறை சட்ட விதிகள் காரணமாக விலக்கு பெறலாம் என்கிற ஒரு குறிப்பிட்ட விதி இருப்பதால், ஒப்பந்தத்தை முன்கூட்டியே முறித்துக் கொள்வதற்காக ட்ரீம்11 எந்த அபராதத்தையும் செலுத்த வேண்டியதில்லை என்று கூறப்படுகிறது.
செப்டம்பர் மாதம் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி, ஆசிய கோப்பை தொடரில் விளையாட உள்ளது.அந்த தொடரில், இந்திய அணியின் ஜெர்ஸியில் ட்ரீம் 11 இடம்பெறாது என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.
மசோதா குறித்து ட்ரீம் 11 அறிக்கை:
நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், ட்ரீம்11 நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "நாங்கள் எப்போதும் சட்டத்தை மதிக்கும் நிறுவனமாக இருந்து வருகிறோம். எங்கள் வணிகத்தையும் எப்போதும் சட்டத்திற்கு இணங்கவே நடத்தி வருகிறோம். தற்போது இயற்றப்பட்டுள்ள சட்டம் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். பொதுமக்கள் இனி எங்களது செயலியில் பணம் செலுத்தி விளையாட அனுமதிக்கப்படாது. இலவசமாக தங்கள் அணியினை உருவாக்கி விளையாடலாம்" என்று தெரிவித்து இருந்தது.
ட்ரீம்11 நிறுவனம் பிசிசிஐயுடன் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள முடிவெடுத்துள்ள நிலையில், ஐபிஎல்-லின் அதிகாரப்பூர்வ ஃபேண்டஸி ஸ்பான்ஸராக இருப்பதற்காக பிசிசிஐக்கு ஆண்டுதோறும் ரூ. 125 கோடி செலுத்தும் My11Circle நிறுவனம் என்ன செய்யப் போகிறது என்கிற கேள்வி எழுந்துள்ளது? அவர்களும் ட்ரீம்11 வழியைப் பின்பற்றி ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை என கூறப்படுகிறது. இதுப்போன்ற செயலிகள் பின்வாங்குவதால் பிசிசிஐக்கு சுமார் ரூ.1000 கோடி வரை இழப்பு நேரிடும் என கூறப்படுகிறது.
ட்ரீம்11 மற்றும் My11Circle போன்ற செயலிகள் கிரிக்கெட் வீரர்களுடனும் தனிப்பட்ட முறையில் ஒப்பந்தங்கள் மேற்கொண்டிருந்தது. அந்த ஒப்பந்தத்தையும் முறித்துக் கொள்ள பேண்டஸி நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.