முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகிய மூவரும் இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் இணைந்து மரியாதை செலுத்திய பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துத் தங்கள் கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
ஓபிஎஸ், செங்கோட்டையன் ஒரே காரில் பயணம்
மதுரையிலிருந்து பசும்பொன்னுக்கு ஓபிஎஸ், செங்கோட்டையன் இருவரும் ஒரே காரில் பயணம் செய்தனர். பசும்பொன் செல்லும் வழியில் டிடிவி தினகரனைச் சந்தித்துப் பேசிய பின், மூவரும் இணைந்து தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
பிரிந்தவர்கள் இணைப்பு: ஓபிஎஸ் சபதம்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், "பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வினரை ஒன்றிணைக்கவே பசும்பொன்னில் இன்று இணைந்திருக்கிறோம். அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும், மீண்டும் தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் தேவரின் சன்னதியில் சபதம் மேற்கொண்டிருக்கிறோம். பசும்பொன்னில் இருந்து இந்தக் கூட்டணி தொடரும்" என்றார்.
துரோகத்தை வீழ்த்தவே இணைப்பு: தினகரன்
தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன், " 2 ஆண்டுகளுக்கு முன்பே எங்களுடைய கூட்டணி இருக்கிறது. துரோகத்தை வீழ்த்துவதற்கு எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டு வர தொண்டர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க, ஓபிஎஸ், செங்கோட்டையன் எங்களுடன் இணைந்திருக்கிறார்கள்.
தேர்தலில் ஒன்றிணைந்து நாங்கள் பணியாற்றவிருக்கிறோம். துரோகத்தை வீழ்த்துவதற்குதான் அ.ம.மு.க. உருவாக்கப்பட்டது. நாங்கள் ஜெயலலிதாவின் தொண்டர்கள். அதன் அடிப்படையில் இணைந்திருக்கிறோம்.
சசிகலா இந்தக் கூட்டணியில் உறுதியாக இணைகிறார். எங்களுடைய பணிகள் பற்றி வருங்காலத்தில் கொஞ்சம்கொஞ்சமாகத் தெரிந்துகொள்வீர்கள்" என்றார்.
அ.தி.மு.க.-வில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்ட செங்கோட்டையன், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் பகிரங்கமாக இணைந்து கூட்டணி அமைத்திருப்பது தமிழக அரசியலில் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

LIVE 24 X 7