கரூர் துயரச் சம்பவம் தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைக் குற்றவாளியாக்கக் கூடாது என்று தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
விஜய் மீதான நடவடிக்கை குறித்த கருத்து
கரூர் விவகாரம் குறித்துப் பேசிய அண்ணாமலை, விஜய் மீது வழக்குப் போட்டால், அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிற்காது என்று குறிப்பிட்டார். இது சட்டரீதியான ஒரு பிரச்னை என்றும், "அரசியல் ஆசைக்காக வேண்டுமானால் விஜய்யை ஓரிருநாள் கைது செய்யலாம்" என்றும் அவர் விமர்சித்தார்.
"தமிழக வெற்றிக் கழகம் அல்லது விஜய்க்கு அடைக்கலம் கொடுக்கவோ, பாதுகாக்கவோ வேண்டிய அவசியம் பா.ஜ.க.வுக்கு இல்லை. த.வெ.க. மீது ஒருசில தவறுகள் உள்ளதுதான். அதற்காக விஜய்யை குற்றவாளியாக்கக் கூடாது" என்று வலியுறுத்தினார். மேலும், இந்த விவகாரத்தில் மாநில அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தாங்கள் நியாயத்தை நியாயமாகப் பேசுவதாகவும் அவர் கூறினார்.
நீதிமன்றம் மற்றும் ஆளுநர் விவகாரம்
தொடர்ந்து அவரிடம், நீதிமன்ற உத்தரவுகளைப் பிறப்பிக்கும் நீதிபதிகளையும் விட்டுவைக்காமல் விமர்சிப்பதாகச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமாரின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "கரூர் விவகாரத்தில் நீதியரசர்களை விமர்சிப்பது துரதிர்ஷ்டவசமான விஷயம்தான். நீதியரசர்கள் பற்றி நாங்கள் எப்போதும் குறை சொல்ல மாட்டோம்" என்று அண்ணாமலை தெரிவித்தார்.
மாநில ஆளுநருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் மோதல் போக்குக் கடைப்பிடிப்பது குறித்துப் பேசிய அண்ணாமலை, "தமிழக முதல்வர் மட்டும்தான் மத்திய அரசை எதிரியாகப் பார்க்கிறார்" என்று குற்றம் சாட்டினார். "முதல்வர் தொடர்ந்து ஆளுநரைச் சீண்டிப் பார்ப்பது சரியல்ல, ஆளுநர் கேட்கும் கேள்வி சரியானதுதான். ஆளும் கட்சி அனைத்தையும் அனுசரித்துப் போக வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.
திருமாவளவன் மீதான விமர்சனம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்துப் பேசிய அண்ணாமலை, "திருமாவளவன் கட்சியில் இருந்து மக்கள் பெருமளவு வெளியேறி மற்ற கட்சிக்குச் செல்வதைப் பார்க்கிறார். அந்தக் கோபத்தில்தான் மத்திய அரசையும், விஜய்யையும் அவர் விமர்சிக்கிறார்" என்று தெரிவித்தார். மேலும், "ராகுல் மணிப்பூர் போகும்போது பா.ஜ.க.வினர் கரூர் வரக்கூடாதா?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு கரூர் சம்பவம் குறித்து விசாரித்து வருவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அஸ்ரா கார்க் நல்ல அதிகாரி. அவர் விசாரணையை நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.