அரசியல்

அனைத்துக் கட்சி கூட்டம்.. தமிழ்நாடு அரசு போட்ட பலே பிளான் இதுதான்!

All Party Meeting in Tamil Nadu : அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்களையும் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அனைத்துக் கட்சி கூட்டம்..  தமிழ்நாடு அரசு போட்ட பலே பிளான் இதுதான்!
அனைத்துக் கட்சி கூட்டம் தமிழ்நாடு அரசு போட்ட பலே பிளான் இதுதான்

All Party Meeting in Tamil Nadu : மாநில உரிமைகளை பறிக்கும் அல்லது மாநில கொள்கைக்கு எதிரான முக்கிய பிரச்சனைகளின் போது அதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வது தொடர்பாக விவாதிப்பதற்காக மாநிலத்தின் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினருக்கு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு, அனைத்து கட்சி கூட்டம் நடத்தி  விவாதித்து அவர்களிடம் ஆலோசனைகளை கேட்டு  பெறுவது வழக்கம்.

அந்த வகையில்  சமீபத்தில் தமிழ்நாடு அரசு எதிர்கொண்டு வரும்  தொகுதி மறுசீரமைப்பு மற்றும் புதிய கல்வி கொள்கை பிரச்சனை தொடர்பாக விவாதிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட 40 கட்சிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

தமிழகத்தில் மொத்தம் 183 கட்சிகள் உள்ள நிலையில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பதிவு செய்யப்பட்ட 40 கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. இதனிடையே, அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்தன.

இதையடுத்து, கடந்த 3-ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தில் மாநிலத்தின் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ள நிலையில், மாநிலத்தின் உரிமைக்காக அரசியல் கட்சிகள் கௌரவம்  பார்க்காமல் அதில்  பங்கேற்க வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

மேலும், அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் தவெக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் கலந்து கொள்வார் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில், அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு அனைத்து கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்களையும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.