அரசியல்

ஆளுநர் தேநீர் விருந்து: தி.மு.க. கூட்டணி புறக்கணிப்பு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி - தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்த நிலையில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.

ஆளுநர் தேநீர் விருந்து: தி.மு.க. கூட்டணி புறக்கணிப்பு!
ஆளுநர் தேநீர் விருந்து: தி.மு.க. கூட்டணி புறக்கணிப்பு!
இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று ( ஆகஸ்ட் 15 ) மாலை தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். எனினும், தமிழக அரசின் செயல்பாடுகள்குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருவது உள்ளிட்ட காரணங்களால், இந்த விருந்தைக் காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தனர்.

அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், எதிர்க்கட்சியான அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அ.தி.மு.க, பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள், ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் இந்த விருந்தில் கலந்துகொண்டனர்.

பாஜக சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், ஹெச்.ராஜா பங்கேற்றுள்ளனர் அதிமுக சார்பில் எம்.பி இன்பதுரை பங்கேற்றுள்ளார்.
அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் சிவக்குமார், வெங்கடேஷ், சதாசிவம் ஆகியோரும் தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளனர். மேலும் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோருக்கும் பங்கேற்றனர்.

சுதந்திர தின விழாவான இன்று நடைபெற்ற இந்த நிகழ்வு, தமிழக அரசியல் களத்தில் ஆளுநர் - அரசு இடையேயான கடும் மோதலை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் சில அரசியல் பிரச்னைக்களுக்காகத் தேநீர் விருந்து புறக்கணிக்கப்பட்ட நிலையில், இந்தப் புறக்கணிப்பு ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிரான ஒரு எதிர்ப்பு நடவடிக்கையாக அரசியல் ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.