அதிமுக ஆட்சியில் மக்கள் நிம்மதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மாளிவாக்கம் பகுதியில் அதிமுக நிர்வாகியின் இல்லத்திற்கு சென்ற அவர் மணமக்களை வாழ்த்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கும். தமிழ்நாடு முழுமையாக பாதிக்கப்படுகிறது. ஆளுங்கட்சியின் தலையீட்டாலேயே சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது என தெரிவித்தார்.
மேலும், அதிமுக ஆட்சிக்காலத்தில் யார் தவறு செய்தாலும் தண்டனை வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இருந்தனர் எனவும், திமுக ஆட்சியில் 10 மாதங்களில் 918 கொலைகள் நடந்துள்ளன எனவும், தமிழ்நாடு கொலை மாநிலமாக மாறியுள்ளது என குற்றம்சாட்டினார்.
மாநிலத்தின் உரிமை
திராவிட மாடல் எனக் கூறிக்கொள்ளும் ஸ்டாலின், இதை பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை, வெளியில் சென்றால் திரும்பி வருவோம் என்பது இந்த ஆட்சியில் உத்தரவாதம் கிடையாது. சோற்றில் பூசணிக்காயை மறைக்கும் வித்தை திமுகவுக்கு தெரியும் என தெரிவித்தார். மேலும், சோஷியல் மீடியா மூலம் நல்லாட்சி நடத்துவது போல் செயல்படுகின்றனர். மாநிலத்தின் உரிமையை தாரை பார்த்துவிட்டு, துதிபாடிகளின் பட்டத்தை கொடுத்துவிட்டால் மாநிலத்தின் சுயாட்சி பாதுகாவலர் ஆகிவிட முடியுமா என கேள்வி எழுப்பினார்.
அந்தப் பட்டத்தைப் பெற ஸ்டாலினுக்கு எந்த ஒரு தகுதியும் இல்லை. திமுக தாரை வார்த்து கொடுத்த உரிமைகளை அதிமுக மீட்டெடுத்தது. குறிப்பாக முல்லை பெரியார் பிரச்சனை, காவிரி விவகாரம், கச்சத்தீவு தாரை வைத்து கொடுத்தது என அனைத்தும் திமுக ஆட்சியில் தான் எனவும், கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு இந்திரா காந்தி மாற்றிய போது 17 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபோது கேட்காததால் நீட் போன்ற கொடூர அரக்கனால் தமிழ்நாடு கஷ்டப்படுகிறது என விமர்சனம் செய்தார்.
ஸ்டாலினுக்கு எந்த ஒரு தகுதியும் இல்லை
மாநில சுயாட்சி நாயகன் என்ற பட்டம் அவர்களுக்குள்ளே ஏற்படுத்திக் கொள்வது. தேமுதிக ராஜ்ய சபா உறுப்பினர் குறித்த கேள்விக்கு அதெல்லாம் கட்சி பார்த்துக்கொள்ளும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், எந்த நாளிலும் தீவிரவாதம் வேரறுக்கப்பட வேண்டும். ஒழிக்கப்பட வேண்டும் எனவும் கூறிய அவரிடம், ராயபுரத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று முடிசூடா மன்னனாக இருந்தேன். ஏற்கனவே கூறியிருந்தீர்கள், ஓராண்டுக்குள் அனைத்தையும் சமாளித்து விட்டீர்களா என்ற செய்தியாளரின் கேள்விக்கு அதையெல்லாம் பொதுச்செயலாளர் பேசிவிட்டார் என தெரிவித்தார்.