அரசியல்

"மக்களுடன் ஸ்டாலின் — தேர்தலுக்கான நாடகம்" - தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

உங்களுடன் ஸ்டாலின், மக்களுடன் ஸ்டாலின் எல்லாமே தேர்தலுக்காகக் கொண்டு வரப்பட்ட நாடகம் தான், இதைக்கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன்
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, ஒரே நாடு, ஒரே தேர்தல் அமைப்பின் மாநில பொறுப்பாளர் என்பதால் டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள செல்கிறேன் என்று கூறினார்.

கீழடியை யாரும் மறைக்கவில்லை

பிரதமர் 2 நாள் பயணமாகத் தமிழகம் வந்தது உற்சாகத்தை தந்து உள்ளது. தமிழகத்தில் சோழ மன்னனை பெறுமைப்படுத்திடவும், தென் மாவட்ட மக்களுக்காக விமான நிலையத்தை விரிவுப்படுத்தி தந்ததை மறைப்பதை போல் அறிக்கை தருகிறார். உலகத்திற்கு கங்கை- காவிரி இணைப்பைத் தமிழன் செய்துள்ள பெருமையைப் பேசப் பிரதமர் வருகிறார். ஆன்மீக தமிழனை தமிழனாக ஏற்றுக் கொள்வதில்லை என்ற மிகச் மோசமான சூழ்நிலை இங்குள்ளது. ராஜேந்திர சோழனும் தமிழன் தான். அவரது சாதனைகள் எல்லாம் தமிழனின் சாதனை தான் என்று கூறினார்.

மோடி வரும்போது கீழடியை பற்றிப் பேசுகிறார்கள். கீழடியை யாரும் மறைக்கவில்லை. கீழடி பற்றிய அறிவிப்பு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். பிரதமர் வருவதை பெருமையாகக் கருதாமல் இருப்பது தான் வேதனையாக இருக்கிறது. தமிழனை பாராட்டப் போற்ற தான் பிரதமர் மோடி தமிழகம் வந்தார்.

பலம் வாய்ந்த அதிமுக - திமுக கூட்டணி

"திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் ஏன் பதற்றத்துடன் இருக்கிறார்கள். அதிமுக- பா.ஜ.க.வும் பலம் வாய்ந்த கூட்டணியாக இருக்கிறது. மோடியும், அமித்ஷாவும் பல மாநிலங்களில் வெற்றி கண்டவர்கள், பல மாநிலங்களில் வெற்றி பார்முலாக்களை ஏற்படுத்தி, நேர்மறையாக அரசியல் செய்பவர்கள் என்று பெருமையுடன் கூறினார். அரசியலில் அவர்களைக் குறைத்து மதிப்பீட முடியாது என்று கூறிய அவர், பலரும் பல கருத்துகளைச் சொல்லாம். ஆனால், மறைமுகமாகத் திமுகவுடன் கூட்டணி என்று சொல்லிக் கொள்ளலாம். பா.ஜ.க - அதிமுக பலமான கூட்டணியாக இருக்கிறது. தமிழகத்தில் மக்கள் பரிதவித்துக் கொண்டு இருக்கிறார்கள் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கூறிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தக் கட்சி இணைந்தாலும் மிகப்பெரிய கூட்டணி தான்" என்று பெருமையுடன் தெரிவித்தார்.

அரசு மருத்துவமனையின் அவலநிலை

தொடர்ந்து பேசிய அவர், "அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாமல் பிறந்த குழந்தைகளைத் தரையில் படுக்கவைக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார். தனியார் மருத்துவமனையில் உள்ள வசதிபோல் அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்துங்கள் என்று சொல்கிறோம். பாதுகாப்பு காரணங்களுக்காகத் தனியார் மருத்துவமனைக்குச் செல்வதாகக் கூறுகின்றனர். சாலையில் செல்ல முடியாது என்பதால் ரயிலில் செல்கிறார்கள். அனைவருக்கும் ஒரேமாதிரியான வசதிகள் கிடைக்க வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.

"யாரும் துன்பப்படுத்துவதையும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்காப்படுவதையும் ஏற்று கொள்ள முடியாது என்றும், பூதக் கண்ணாடி வைத்து மற்ற மாநிலங்களைப் பார்ப்பதை விடத் தமிழ்நாட்டில் நடப்பதை பார்க்க வேண்டும் என்று கூறினார். 14 ஆயிரம் செவிலியர்கள் போராடி கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் சென்று திராவிட மாடல் குறித்தும், துணை முதல்வர் கருத்து குறித்தும் கேளுங்கள் என்று சொல்வார்கள்” என்று கூறினார்.

”காங்கிரஸ் நிலைமைபோல் பா.ஜ.கவுக்கு இல்லை. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அங்கீகாரம் தந்து உள்ளனர். காங்கிரஸ் தான் பரிதவித்துப் போய் உள்ளது. அமித்ஷா, மோடி வரும்போது சரியாக அங்கீகாரம் தருகின்றனர். செல்வ பெருந்தகை என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் பேசிக் கொண்டு இருக்கிறார்”.

தேர்தலுக்காக மகளிர் உரிமைத்தொகை

”தேர்தலுக்காகத் தான் மகளிர் தொகையை வழங்க உள்ளனர். ஆட்சிக்கு வந்து 2 வருடம் கழித்து தான் மகளிர் உரிமைத்தொகை கொடுத்தபோது, 2 வருட பணத்தையும் சேர்த்து தந்து இருக்க வேண்டும், ஏன் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார். உங்களுடன் ஸ்டாலின், மக்களுடன் ஸ்டாலின் என எல்லாமே தேர்தலுக்காகத் தான். இதனைக்கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்”. இவ்வாறு அவர் கூறினார்.