சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஸ்ரீராஜா சொக்கர் இல்லத் திருமணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்துப் பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தியுடன் தனக்கிருக்கும் தனிப்பட்ட நட்பு மற்றும் அரசியல் உறவு குறித்து நெகிழ்ச்சியுடன் அவர் பகிர்ந்துகொண்டார்.
ராகுல் காந்தியுடனான நட்பு
திருமண விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் உறவுகளுக்கு அப்பால் ராகுல் காந்தியுடன் தனக்குள்ள தனிப்பட்ட பந்தத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்.
"மற்ற அரசியல் கட்சித் தலைவர்களை அழைக்கும் போது நான் யாரையும் சகோதரர் என்று குறிப்பிட்டதில்லை. ஆனால், ராகுல் காந்தியை மட்டும் சகோதரர் என்று அழைக்கிறேன். காரணம், அவர் என்னை மூத்த அண்ணன் என்று குறிப்பிடுகிறார். போனில் பேசும்போதும், நேரில் பேசும்போதும் அவர் என்னை 'மை டியர் பிரதர்' என்று அழைக்கிறார். அதை என்னால் மறக்க முடியாது," என்று முதல்வர் பேசினார்.
நாட்டு நலனுக்கான கொள்கை உறவு
தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் உறவு வெறுமனே அரசியல் கூட்டணி அல்ல, அது கொள்கை ரீதியான உறவு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
"தி.மு.க., காங்கிரஸ் பேரியக்கம் ஒரு காலத்தில் வேறு வேறு பாதையில் பயணித்திருந்தாலும், இன்று நாட்டின் நன்மைக்காக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக, அதையும் தாண்டி இந்திய நாட்டின் ஒற்றுமைக்காக ஒரே அணியில், ஒரே சிந்தனையுடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம்."
ராகுல் காந்தியுடனான இந்த அரசியல் உறவு, "அரசியல் உறவாக மட்டுமல்லாமல், கொள்கை உறவாகவும் வலுப்பெற்று இந்தியாவின் குரலாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த இரு இயக்கங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள புரிதலும், கொள்கை ரீதியான உறவும் நிச்சயமாய் நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் என்றும் முதல்வர் உறுதியாகத் தெரிவித்தார்.
சுயமரியாதைத் திருமணம்
முன்னதாக, மணமக்களை வாழ்த்திப் பேசிய முதல்வர் ஸ்டாலின், "சுயமரியாதை உணர்வுடன் இந்தத் திருமணம் நடந்து இருக்கிறது. 1967-க்கு பிறகு தி.மு.க., அண்ணா தலைமையில் ஆட்சி பொறுப்பேற்று, சீர்திருத்தத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தார்" என்றார்.

LIVE 24 X 7