வேலூர் மாநகர தே.மு.தி.க. பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம், வேலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் கலந்துகொண்டு, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் வியூகங்கள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
கூட்டணி குறித்து பேச்சு
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், "எல்லா கட்சிகளுக்கும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தல் எப்படி இருக்கும், எந்தெந்த இடங்களில் வெற்றி பெற வேண்டும் என நாங்கள் ஆலோசித்து வருகிறோம். யாருடன் கூட்டணி என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள். தற்போது கட்சி வளர்ச்சியை நோக்கி மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம். வரும் ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்த தெளிவான அறிவிப்பு வெளியாகும்" என்று தெரிவித்தார்.
கேள்விக்குறியான சட்டம்-ஒழுங்கு
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்துப் பேசிய அவர், "சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஆணவக் கொலைகள், லாக்கப் படுகொலைகள், போதைப்பொருள் மற்றும் கஞ்சா விற்பனை அதிகரிப்பு, நகை கொள்ளை, கொலைகள் ஆகியவை தமிழகம் முழுவதும் பரவியுள்ளன. சட்டம்-ஒழுங்கைத் தனது கையில் வைத்துள்ள முதல்வர், இதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் இயற்றப்பட்டால், அதைத் தே.மு.தி.க. வரவேற்கும் என்றும் பிரேமலதா கூறினார். மேலும், "பாரதியார், பெரியார் போன்றவர்கள் 'ஜாதியில்லை' எனச் சொல்லிச் சென்றாலும், இன்றும் ஜாதிக்காகத்தான் கொலைகள் நடக்கின்றன. தே.மு.தி.க. ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது என்று ஏற்கனவே விஜயகாந்த் கூறியிருக்கிறார். அதுதான் எங்கள் கொள்கை" என்று தெரிவித்தார்.
விஜயகாந்த் படத்தை பயன்படுத்தக்கூடாது
தி.மு.க. ஆட்சி குறித்துப் பேசிய அவர், "நிறையும் குறையும் கலந்த ஒரு ஆட்சியாக தி.மு.க. உள்ளது. அதனால்தான், கடந்தமுறை அதற்கு 50 மார்க் கொடுத்தேன்" என்று குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி குறித்துப் பாராட்டிப் பேச மாட்டார் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் ஆளும் கட்சியை எதிர்த்தும், குறை சொல்வதும் தான் அவரது வேலை என்றும் கூறினார்.
கடைசியாக, "விஜயகாந்த் ஒரு அரசியல் கட்சியின் தலைவர். எனவே, கூட்டணிக்கு வரும்போது வேண்டுமானால் அவரது படத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், தனிப்பட்ட முறையில் எந்தவொரு அரசியல் கட்சியும் விஜயகாந்த் படத்தைப் பயன்படுத்தக் கூடாது. சினிமாவில் யார் வேண்டுமானாலும் அவரது புகைப்படத்தைப் பயன்படுத்தலாம்" என்று தெரிவித்தார்.