காஞ்சிபுரம் மாவட்டம், வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது கோவில் விமான கலசம் புனித நீர் ஊற்றும் பகுதிக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் முன்கூட்டியே சென்றதாகவும், தாமதமாக வந்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையை, காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கும்பாபிஷேக விழா முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, “கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. அதிகாரிகளைப் பொறுத்தவரை மிகவும் மெத்தன போக்கை கடைபிடித்து வருகின்றனர். யார் யாரை கட்டுப்படுத்துவது என்பதே தெரியவில்லை. பாதுகாப்பில்லாத நிலையில் தான் கும்பாபிஷேக விழா நடந்து முடிந்துள்ளது. இதனை மிகவும் செம்மைப்படுத்தி செய்திருக்கலாம்.
2000 ஆண்டுகளாக இந்த பிரச்சனை இருந்து வருகிறது. ஆகையால் மக்களோடு மக்களாக விழாவில் பங்கேற்று பார்த்து விட்டு வந்துள்ளேன். திமுக அரசுக்கும், அறநிலையத்துறைக்கும் கலங்கம் ஏற்படுத்தக் கூடாது என்பதால்தான் மக்களோடு மக்களாக பங்கேற்று இருந்தேன். அதிகாரிகள், அதிகாரிகளாக செயல்பட வேண்டும்.
தமிழிசை சௌந்தரராஜனுக்கு கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றும் பகுதிக்கு அனுமதி அளித்தது குறித்து அதிகாரிகளிடம் தான் கேட்க வேண்டும். ஒருவேளை தெலுங்கானா முன்னாள் ஆளுநருக்கு மரியாதை அளிக்க வேண்டும் சட்டமன்ற உறுப்பினரை பின்னாடி நிற்க வைக்கலாம் என அதிகாரிகள் எண்ணினார்களா என்று தெரியவில்லை” என்று அவர் கூறினார்.