தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை நடத்தவிருந்த பெரம்பூர் பிரசாரத்திற்குப் பாதுகாப்பு காரணங்களால் தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது. மாற்று இடத்தைத் தேர்வு செய்யுமாறு காவல்துறை தரப்பில் அக்கட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிடப் போவதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அங்கிருந்தே தனது பிரசாரத்தைத் தொடங்க அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால், நாளை நடைபெறவிருந்த இந்தப் பிரசாரத்திற்குத் தற்போது தேர்தல் ஆணையம் முட்டுக்கட்டை போட்டுள்ளது.
பாதுகாப்புக் காரணங்கள்
பிரசாரம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்த இடம் மிகவும் சிறியது என்றும், அங்கு 3,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கூடினால் கூட்ட நெரிசலில் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்துத் தேர்தல் ஆணையத்திற்குப் போலீசார் அளித்த அறிக்கையின் அடிப்படையில், பெரம்பூர் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாற்று இடத்திற்கு விண்ணப்பம்
பிரசாரத்திற்குத் தடை விதிக்கப்படவில்லை என்றாலும், தற்போதைய இடத்திற்குப் பதிலாகப் போதிய வசதிகளுடன் கூடிய மாற்று இடத்தைத் தேர்வு செய்யுமாறு தமிழக வெற்றிக் கழகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையிடம் புதிய விண்ணப்பம் அளிக்குமாறு அக்கட்சியினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக நிர்வாகிகள் தற்போது மாற்று இடத்தைத் தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

LIVE 24 X 7