அரசியல்

அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. முழு விவரம்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார்.

அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. முழு விவரம்!
ADMK second phase candidate list
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (மார்ச் 27) வெளியிட்டுள்ளார். 127 தொகுதிகளுக்கான இந்த அறிவிப்பின் மூலம் அதிமுக தனது தேர்தல் களத்தை முழுவீச்சில் தயார் செய்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக தனது இரண்டாம் கட்டப் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 23 பேர் கொண்ட முதல்கட்ட பட்டியல் வெளியான நிலையில், தற்போது 127 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 169 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, தனது கோட்டையாகக் கருதப்படும் பல தொகுதிகளில் முக்கிய முகங்களை நிறுத்தியுள்ளது. குறிப்பாக, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரின் தொகுதிகளில் புதிய வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் விவரம்:

திருவள்ளூர் மாவட்டம்:

கும்மிடிபூண்டி - V. சுதாகர், பொன்னேரி (தனி) - சிறுணியம் P. பலராமன், திருத்தணி - திருத்தணி கோ. அரி, திருவள்ளூர் - B V ரமணா, மாதவரம் - மாதவரம் V. மூர்த்தி, திருவொற்றியூர் - K. குப்பன்.

காஞ்சிபுரம் / செங்கல்பட்டு மாவட்டம்:

ஸ்ரீபெரும்புதூர் (தனி) - K. பழனி, தாம்பரம் - சிட்லபாக்கம் ச.இராசேந்திரன், செங்கல்பட்டு - M.கஜா (எ) கஜேந்திரன், செய்யூர் (தனி) - E. ராஜசேகர், மதுராந்தகம் (தனி) - மரகதம் குமரவேல், காஞ்சிபுரம் - V. சோமசுந்தரம்.

வேலூர் / ராணிப்பேட்டை / திருப்பத்தூர் மாவட்டம்:

அரக்கோணம் (தனி) - சு. ரவி, காட்பாடி - V.ராமு, ஆற்காடு - S.M. சுகுமார், வேலூர் - S.R.K. அப்பு, அணைக்கட்டு - த. வேலழகன், குடியாத்தம் (தனி) - G. பரிதா புருஷோத்தமன், வாணியம்பாடி - G. செந்தில்குமார், ஆம்பூர் - R. வெங்கடேசன்.

கிருஷ்ணகிரி / தருமபுரி மாவட்டம்:

ஊத்தங்கரை (தனி) - T.M. தமிழ்செல்வம், பர்கூர் - E.C. கோவிந்தராசன், கிருஷ்ணகிரி - K. அசோக்குமார், வேப்பனஹள்ளி - P. பாலகிருஷ்ண ரெட்டி, தருமபுரி - மரகதம் வெற்றிவேல், பாப்பிரெட்டிபட்டி - V. சம்பத்குமார்.

திருவண்ணாமலை / விழுப்புரம் மாவட்டம்:

செங்கம் (தனி) - T.S. வேலு, கீழ்பென்னாத்தூர் - எஸ். இராமச்சந்திரன், ஆரணி - L. ஜெயசுதா, செய்யார் - முக்கூர் N. சுப்பிரமணியன், வந்தவாசி (தனி) - P. ராணி, திண்டிவனம் (தனி) - P. அர்ஜூனன், மைலம் - P. முருகன்.

விழுப்புரம் / கள்ளக்குறிச்சி மாவட்டம்:

விழுப்புரம் - K.விஜயா, திருக்கோயிலூர் - S. பழனிசாமி, உளுந்தூர்பேட்டை - இரா.குமரகுரு, சங்கராபுரம் - R. ராகேஷ், கள்ளக்குறிச்சி (தனி) - S.ராஜீவ்காந்தி.

சேலம் / நாமக்கல் மாவட்டம்:

கங்கவல்லி (தனி) - A. நல்லதம்பி, ஆத்தூர் (தனி) - A.P. ஜெயசங்கரன், ஏற்காடு - P. உஷாராணி, ஓமலூர் - R. மணி, மேட்டூர் - G. வெங்கடாஜலம், சங்ககிரி - S. வெற்றிவேல், ராசிபுரம் (தனி) - J. வினோத், வீரபாண்டி - டாக்டர் ஸ்ரீ பாலாஜி சுகுமார், சேந்தமங்கலம் (ST) - C. சந்திரசேகரன், நாமக்கல் - ஸ்ரீதேவி P.S. மோகன், பரமத்தி வேலூர் - S. சேகர், திருச்செங்கோடு - R. சந்திரசேகர்.

ஈரோடு / திருப்பூர் / கோவை மாவட்டம்:

ஈரோடு (கிழக்கு) - R.மனோகரன், தாராபுரம் (தனி) - P.சத்தியபாமா, காங்கேயம் - N.S.N. நடராஜ், பெருந்துறை - J.K. (எ) S. ஜெயக்குமார், அந்தியூர் - P. ஹரிபாஸ்கர், கோபிச்செட்டிப்பாளையம் - V.B.பிரபு, பவானிசாகர் (தனி) - A. பண்ணாரி, திருப்பூர் (வடக்கு) - M.S.M. ஆனந்தன், பல்லடம் - K.P. பரமசிவம், சூலூர் - V.P. கந்தசாமி.

நீலகிரி / கோவை மாவட்டம்:

உதகமண்டலம் - பொன். ஜெயசீலன், கூடலூர் - A. ராமு, மேட்டுப்பாளையம் - O.K.சின்னராஜ், கவுண்டம்பாளையம் - P.R.G. அருண்குமார், கோயம்புத்தூர் தெற்கு - அம்மன் K. அர்ச்சுணன், சிங்காநல்லூர் - K.R. ஜெயராம், கிணத்துக்கடவு - செ. தாமோதரன், பொள்ளாச்சி - முனைவர் பொள்ளாச்சி V. ஜெயராமன், வால்பாறை (தனி) - D. லட்சுமண சிங், உடுமலைப்பேட்டை - உடுமலை K. ராதாகிருஷ்ணன்.

திண்டுக்கல் / கரூர் மாவட்டம்:

பழனி - K. ரவி மனோகரன், ஆத்தூர் - A.விஸ்வநாதன், நிலக்கோட்டை (தனி) - S. தேன்மொழி, திண்டுக்கல் - டாக்டர் V.P.B. பரமசிவம், அரவக்குறிச்சி - K. செல்வக்குமார், கிருஷ்ணராயபுரம் (தனி) - டாக்டர் S.திவ்யா, குளித்தலை - S. கருணாகரன்.

திருச்சி / பெரம்பலூர் மாவட்டம்:

மணப்பாறை - டாக்டர் P.L. விஜயகுமார், ஸ்ரீரங்கம் - R.மனோகரன், திருச்சிராப்பள்ளி (கிழக்கு) - க. ராஜசேகரன், திருவெறும்பூர் - ப. குமார், லால்குடி - டாக்டர் M.லீமா ரோஸ், மணச்சநல்லூர் - N. யோகநாதன், துறையூர் (தனி) - இ. சுரோஜா, பெரம்பலூர் (தனி) - இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்.

கடலூர் / மயிலாடுதுறை / நாகப்பட்டினம் / தஞ்சாவூர் மாவட்டம்:

நெய்வேலி - சொரத்தூர் இரா.ராஜேந்திரன், பண்ருட்டி - K. மோகன், கடலூர் - M.C. சம்பத், குறிஞ்சிப்பாடி - A. புவனேந்திரன், புவனகிரி - ஆ. அருண்மொழிதேவன், சிதம்பரம் - K.A. பாண்டியன், சீர்காழி (தனி) - ம. சக்தி, பூம்புகார் - S. பவுன்ராஜ், நாகப்பட்டினம் - தங்க. கதிரவன், திருத்துறைப்பூண்டி (தனி) - உ. பாலதண்டாயுதம், திருவிடைமருதூர் (தனி) - இளமதி சுப்ரமணியன், பாபநாசம் - D.சண்முகபிரபு, ஒரத்தநாடு - M. சேகர், பட்டுக்கோட்டை - C.V. சேகர், பேராவூரணி - கோவி. இளங்கோ.

புதுக்கோட்டை / சிவகங்கை / மதுரை / தேனி மாவட்டம்:

கந்தர்வக்கோட்டை (ST) - P.K. வைரமுத்து, சிவகங்கை - PR. செந்தில்நாதன், திருப்பூர் - P. பெரியபுள்ளான் (எ) செல்வம், மதுரை கிழக்கு - மாங்குளம் K. மகேந்திரன், சோழவந்தான் (தனி) - கி. மாணிக்கம், மதுரை வடக்கு - டாக்டர் P.சரவணன், உசிலம்பட்டி - I. மகேந்திரன், ஆண்டிபட்டி - A.லோகிராஜன், போடிநாயக்கனூர் - V.T. நாராயணசாமி, கம்பம் - S.T.K. ஜக்கையன்.

விருதுநகர் / இராமநாதபுரம் / தூத்துக்குடி / தென் மாவட்டங்கள்:

ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) - M. சந்திரபிரபா, சிவகாசி - V.G. கணேசன், அருப்புக்கோட்டை - S. சேதுபதி, பரமக்குடி (தனி) - டாக்டர் S. முத்தையா, திருவாடானை - கீர்த்திகா முனியசாமி, முதுகுளத்தூர் - மலேசியா S. பாண்டி, விளாத்திகுளம் - R. சத்யா, தூத்துக்குடி - சி.த.செல்லப்பாண்டியன், ஸ்ரீவைகுண்டம் - S.P.சண்முகநாதன், சங்கரன்கோவில் (தனி) - டாக்டர் திலிபன் ஜெய்சங்கர், கடையநல்லூர் - C. கிருஷ்ணமுரளி, தென்காசி - S. செல்வமோகன்தாஸ், ஆலங்குளம் - K.R.P.பிரபாகரன், திருநெல்வேலி - தச்சை N. கணேசராஜா, அம்பாசமுத்திரம் - முனைவர் இசக்கி சுப்பையா, பாளையங்கோட்டை - S. சையது சுல்தான் சம்சுதீன், கன்னியாகுமரி - என். தளவாய்சுந்தரம்.