தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிப் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்ற அதிகாரப்பூர்வ விவரங்கள் அறிவிக்கப்பட்டன. இம்முறை அதிமுக குறைந்தது 169 இடங்களில் நேரடியாகக் களம் காணும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பாஜக எம்.எல்.ஏ-க்களான வானதி சீனிவாசன் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தங்களின் தற்போதைய தொகுதிகளான கோவை தெற்கு மற்றும் நெல்லையில் போட்டியிடவில்லை என்பது இந்தப் பட்டியலின் மூலம் உறுதியாகியுள்ளது. அந்த இரு தொகுதிகளிலும் அதிமுக நேரடியாகப் போட்டியிடவுள்ளது.
பாஜக மற்றும் பாமக போட்டியிடும் தொகுதிகள்
கூட்டணியில் அதிகபட்சமாக பாஜக 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மயிலாப்பூர், நாகர்கோவில், விளவங்கோடு, தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட முக்கியத் தொகுதிகள் இதில் அடங்கும். பாமக 18 தொகுதிகளில் களம் காண்கிறது. தருமபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி மற்றும் சேலம் மேற்கு போன்ற வட மாவட்டத் தொகுதிகள் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
அமமுக மற்றும் இதர கூட்டணிக் கட்சிகள்
டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக 11 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சைதாப்பேட்டை, மன்னார்குடி மற்றும் பூந்தமல்லி உள்ளிட்ட இடங்கள் இதில் அடங்கும். ஜி.கே.வாசனின் தமாகா 5 தொகுதிகளிலும், ஐஜேகே 2 தொகுதிகளிலும் (பல்லாவரம், குன்னம்) போட்டியிடவுள்ளன. ஜான் பாண்டியனின் தமமுக ராஜபாளையத்திலும், பூவை ஜெகன்மூர்த்தியின் புரட்சி பாரதம் கே.வி.குப்பம் தொகுதியிலும் களம் காண்கின்றன.
கூட்டணிக் கட்சிகளின் முழுமையான தொகுதிப் பட்டியல்:
பாஜக (27 தொகுதிகள்):
மயிலாப்பூர், தளி, முடக்குறிச்சி, உதகமண்டலம், அவிநாசி, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை, ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் (தனி).
பாமக (18 தொகுதிகள்):
சேலம் மேற்கு, தர்மபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, விருதாச்சலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோவில், கீழ்வேளூர், பெரம்பலூர், சேலம் வடக்கு, அம்பத்தூர்.
அமமுக (11 தொகுதிகள்):
பெரியகுளம், மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி, திருப்பத்தூர், நாங்குநேரி, ஒட்டப்பிடாரம், திருச்சி மேற்கு, சைதாப்பேட்டை, பூந்தமல்லி, மடத்துக்குளம்.
தமாகா (5 தொகுதிகள்):
ஒட்டன்சத்திரம், ஈரோடு (மேற்கு), ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம்.
ஐஜேகே (2 தொகுதிகள்):
பல்லாவரம், குன்னம்.
தமமுக (1 தொகுதி): ராஜபாளையம். | புரட்சி பாரதம் (1 தொகுதி): கே.வி.குப்பம்.

LIVE 24 X 7