அரசியல்

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மாஜி அமைச்சர்களுக்கு முன்னுரிமை!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25) வெளியிட்டுள்ளார்.

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மாஜி அமைச்சர்களுக்கு முன்னுரிமை!
ADMK candidate list
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25) வெளியிட்டுள்ளார். அனுபவம் வாய்ந்த முன்னாள் அமைச்சர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தப் பட்டியல் அமைந்துள்ளது.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தனது முதல் கட்டமாக 23 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் மீண்டும் போட்டியிடுகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்த நிலையில், கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

முன்னாள் அமைச்சர்களுக்கு முன்னுரிமை

இந்த முதற்கட்டப் பட்டியலில் 20 முன்னாள் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, ராயபுரத்தில் டி.ஜெயக்குமார், தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணி, குமாரபாளையத்தில் பி.தங்கமணி, மதுரையில் செல்லூர் கே.ராஜு மற்றும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் மீண்டும் அதே தொகுதிகளில் களம் காண்கின்றனர். மேலும், சி.வி.சண்முகம் (மைலம்), கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), சி.விஜயபாஸ்கர் (விராலிமலை) மற்றும் கடம்பூர் ராஜூ (கோவில்பட்டி) உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வியூகம் மற்றும் கூட்டணி

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக (27), பாமக (18), அமமுக (11), தமாகா (5) மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (1) ஆகிய கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேட்பாளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, இன்று மயிலாப்பூரில் இருந்து எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார். திமுக மற்றும் தவெக போன்ற கட்சிகளுடன் மும்முனைப் போட்டி நிலவும் சூழலில், செல்வாக்கு மிக்க வேட்பாளர்களை முதற்கட்டமாக அறிவித்து அதிமுக தனது தேர்தல் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது.

முழுமையான வேட்பாளர் பட்டியல் விவரம்

எடப்பாடி - எடப்பாடி கே. பழனிசாமி

வேப்பனஹள்ளி - கே.பி. முனுசாமி

திண்டுக்கல் - திண்டுக்கல் சீனிவாசன்

நத்தம் - நத்தம் விஸ்வநாதன்

தொண்டாமுத்தூர் - எஸ்.பி. வேலுமணி

குமாரபாளையம் - பி. தங்கமணி

ராயபுரம் - டி. ஜெயக்குமார்

மைலம் - சி.வி. சண்முகம்

மதுரை மேற்கு - செல்லூர் கே. ராஜு

பாலக்கோடு - கே.பி. அன்பழகன்

அரியலூர் - தாமரை எஸ். ராஜேந்திரன்

திருப்பரங்குன்றம் - வி.வி. ராஜன் செல்லப்பா

நன்னிலம் - ஆர். காமராஜ்

வேதாரண்யம் - ஓ.எஸ். மணியன்

விராலிமலை - சி. விஜயபாஸ்கர்

கோவில்பட்டி - கடம்பூர் ராஜூ

திருமங்கலம் - ஆர்.பி. உதயகுமார்

சிவகாசி - கே.டி. ராஜேந்திர பாலாஜி

மதுரவாயல் - பி. பெஞ்சமின்

கலசப்பாக்கம் - அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி

பவானி - கே.சி. கருப்பணன்

ஜோலார்பேட்டை - கே.சி. வீரமணி

கரூர் - எம்.ஆர். விஜயபாஸ்கர்