நாட்டின் 79-வது சுதந்திர தினம் நாளை மறுதினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்குத் தமிழக ஆளுநர் மாளிகையில் நடத்தப்படும் தேநீர் விருந்தை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சி.பி.எம்.) உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
காலம்தாழ்த்தி அனுப்பப்பட்ட சட்டமசோதா- செல்வப்பெருந்தகை
இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தனது எக்ஸ் பக்கத்தில் “தமிழ்நாட்டு மக்களுக்கும், மண்ணின் உரிமைக்கும் பதவியேற்றக் காலத்திலிருந்தே எதிராக செயல்படும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்தும், மத்திய பா.ஜ.க. அரசின் தூண்டுதலின் பேரில் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை ஏற்படுத்தும் இந்தியத் தேர்தலை ஆணையத்தை கண்டித்தும், கலைஞர் கருணாநிதியின் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை வேண்டுமென்றே காலம்தாழ்த்தி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதைக் கண்டித்தும், சுதந்திர தினத்தன்று அவர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்- பெ.சண்முகம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் ஆளுநராக பொறுப்பேற்றதிலிருந்து கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமாகவும், தமிழக நலனுக்கு எதிராகவும், அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறார்.
இந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் ஆளுநர்களின் அதிகார வரம்பு குறித்து அறுதியிட்டு கூறிய பிறகும், திருந்த மறுத்து தனது நிலைபாடுகளையே மேற்கொண்டு வருகிறார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட கலைஞர் பல்கலைக்கழக மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உச்ச நீதிமன்றம் சொன்னாலும் நான் கேட்க மாட்டேன் என தானடித்த மூப்பாக செயல்பட்டு வருகிறார்.
இந்த பின்னணியில், ஆளுநர் ஆர்.என் ரவியின் அணுகுமுறையை கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சுதந்திரத் தினத்தன்று அவர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
வழக்கம்போல் விசிக பங்கேற்காது- திருமாவளவன்
அதேபோல் திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில், “வழக்கம்போல மேதகு ஆளுநர் அவர்கள் சுதந்திர நாள் விழாவில் பங்கேற்கும்படி விசிகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதற்காக அவருக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளையில் வழக்கம்போல அவ்விழாவில் விசிக பங்கேற்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.