இந்தியா

தெரு நாயிடம் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றிய ஜெர்மன் ஷெப்பர்ட்.. வைரல் வீடியோ!

தெரு நாயிடம் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றிய ஜெர்மன் ஷெப்பர்ட் நாயின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தெரு நாயிடம் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றிய ஜெர்மன் ஷெப்பர்ட்.. வைரல் வீடியோ!
German Shepherd saves children from a stray dog
ஒரு தெரு நாயிடம் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றிய ஜெர்மன் ஷெப்பர்ட் நாயின் துணிச்சலான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

குழந்தைகளை காப்பாற்றிய ஜெர்மன் ஷெப்பர்ட்- வைரல் வீடியோ

வீடியோவில், ஒரு வீட்டில் இருந்து ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்று சுவர்ப்பகுதிக்கு மேலே இருந்து தெருவைப் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அப்போது, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை ஒரு தெருநாய் கடிக்கப் பயிந்தது. இதனால் குழந்தைகள் பயணத்தில் அலறியடித்து ஓடத் தொடங்கினர். இதை கண்ட அந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய், ஒரு சூப்பர் ஹீரோ போல உடனடியாகச் சுவரில் இருந்து குதித்தது. அந்த நாயைத் துணிச்சலுடன் விரட்டி, குழந்தைகளைப் பாதுகாத்தது.

இந்த நாயின் மின்னல் வேகமான செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது இன்னும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.



தெரு நாய்கள் தொல்லை- உச்ச நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

இதற்கிடையில், டெல்லியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் உச்ச நீதிமன்றம் கடந்த 11 ஆம் தேதி ஒரு முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, “8 வாரங்களுக்குள் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து, காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உத்தரவிட்டனர். அங்கு அவற்றுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி போட வேண்டும் எனவும் நாய்களை மீண்டும் வெளியில் விடக்கூடாது எனவும் தெரிவித்தனர்.

மேலும், இந்த உத்தரவை அமல்படுத்துவதைத் தடுக்க முயற்சி செய்யும் நபர்கள் அல்லது அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.