அரசியல்

மீனாட்சி அம்மன் கோயில்: ரூ.1 கோடிக்கு மேல் மின்கட்டணம் பாக்கி.. சித்திரை திருவிழா நடக்குமா?

மதுரையில் சித்திரைத் திருவிழாவை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தியிருப்பதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

மீனாட்சி அம்மன் கோயில்: ரூ.1 கோடிக்கு மேல் மின்கட்டணம் பாக்கி.. சித்திரை திருவிழா நடக்குமா?
மீனாட்சி அம்மன் கோயில்: ரூ.1 கோடிக்கு மேல் மின்கட்டணம் பாக்கி.. சித்திரை திருவிழா நடக்குமா?
தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியது. அப்போது வினாக்கள் - விடைகள் நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி உதயகுமார், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாகவும், அந்த கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே சித்திரைத் திருவிழாவுக்கு மின்சாரம் வழங்க முடியும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருக்கும் தகவல் அமைச்சருக்கு தெரியுமா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, சித்திரைத் திருவிழாவுக்கான முழு ஏற்பாடுகளையும் மதுரை மாநகராட்சி நிர்வாகமே செய்ய வேண்டும் எனவும், பணத்தை பற்றி கவலைப்படாமல் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்ய மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தி இருப்பதாக கூறினார்.

சேகர் பாபு பதில்

இந்நிலையில், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்பாக மதுரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய மின் கட்டணம் முழுவதும் நேற்று செலுத்தப்பட்டதாக தெரிவித்தார். எனவே சித்திரைத் திருவிழாவுக்கு இருந்த பிரச்னை நிறைவடைந்து விட்டதாகவும், பச்சைப் பட்டு உடுத்தி கள்ளளழகர் ஆனந்தமாக, அழகாக களமிறங்குவார் எனவும் தெரிவித்தார்.