கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சூழலில், டெல்லியில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
கரூர் கூட்ட நெரிசலுக்குப் பின்னால் சதி உள்ளது என்றும், தவெகவை முடக்கும் முயற்சியில் திமுக ஈடுபடுகிறது என்றும் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டினார்.
"விஜய் பிரசாரம் செய்தது போலீசார் கூறிய இடத்தில்தான். வேறு எங்கும் செய்யாத நிலையில், காவல்துறையினர்தான் எங்களை வரவேற்றனர். கரூரில் மட்டும் காவல்துறை எங்களை வரவேற்றது ஏன் என்ற கேள்வி எழுகிறது. விஜய் தாமதமாக வந்தார் என்பது அபாண்டமான குற்றச்சாட்டு. காவல்துறை அனுமதி அளித்த நேரமான பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணிக்குள் விஜய் வந்து பிரசாரம் செய்தார்.
தவெகவினரைத் தீவிரவாதிகள் போல காவல்துறையினர் அடித்து அனுப்பினர். ஒட்டுமொத்தக் கட்சியையும் முடக்கும் செயலைத் திமுக செய்வதை நாங்கள் உணர்ந்தோம். தவெக மீது எப்படிப் பொய்க் குற்றச்சாட்டுகளைச் சொல்லலாம் என அரசு திட்டமிட்டது" என்று அவர் கடுமையாகச் சாடினார்.
மாவட்டச் செயலாளர்களைக் கைது செய்யும் முயற்சி
தொடந்து பேசிய அவர், "நெரிசல் சம்பவம் நடைபெற்றதும், கரூர் மாவட்ட எல்லையில் நாங்கள் காத்திருந்தோம். நீங்கள் உள்ளே வந்தால் கலவரம் ஆகிவிடும் என காவல்துறை கூறியதால் வெளியேறினோம். மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோரைக் கைது செய்து, கட்சியையே முடக்கத் திமுக முயற்சிக்கிறது" என்று அவர் குற்றம் சாட்டினார். ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு அரசு அதிகாரிகள் ஒவ்வொருவராக வந்து பேட்டி அளித்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
உயர் நீதிமன்றத்தின் கருத்து குறித்த அதிருப்தி
மேலும், "விஜய்யின் தலைமைப் பண்பு உள்ளிட்டவை குறித்துச் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது அதிர்ச்சியளித்தது. தவெக மற்றும் விஜய்யைக் குற்றவாளி ஆக்கும் வகையில் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது" என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.