இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ், சர்வதேச மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் 70-க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகள் மற்றும் 85-க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் பெரும்பாலும் கேதர் ஜாதவ், சொதப்பியதாக கூறப்படுகிறது. இவர் இருந்தவரை பெரும்பாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைவதற்கு இவரே காரணமாக இருப்பார் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இவ்வாறு கிரிக்கெட் பயணத்தில் பல விமர்சனங்கள் மற்றும் சாதனைகளை சந்தித்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ், தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
அதன்படி, இவர் பாஜகவில் இணைந்துள்ளார். 40 வயதான கேதர் ஜாதவ், மும்பையில் உள்ள பாஜக தலைமையகத்தில் மூத்த தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘சத்ரபதி சிவாஜிக்கு தலைவணங்குகிறேன். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியின் கீழ் பாஜக வளர்ச்சி அரசியல் செய்கிறது” என்று தெரிவித்தார்.
பாஜகவில் இணைந்ததன் மூலம் கேதர் ஜாதவ் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளதாக கூறிய பாஜக மூத்த தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அரசியல்
Kedar jadhav: பாஜகவில் இணைந்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்.. வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ், பாஜகவில் இணைந்ததன் மூலம் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.