மெட்ராஸ் மாகாணத்துக்குத் 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்ட வலியுறுத்தி உண்ணா விரதம் இருந்து உயிர்நீத்த சங்கரலிங்கனாரின் நினைவு நாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சீமான், கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கைச் சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறித்துக் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்தார்.
மாநில தன்னாட்சிக்கு அவமதிப்பு
சீமான் பேசியதாவது:
"சிபிஐ விசாரணை என்பதை நாங்கள் எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை. இது மாநில உரிமைக்கும், மாநிலத் தன்னாட்சிக்கும் நிகழ்ந்த அவமதிப்பு ஆகும். எங்கள் காவல்துறை விசாரணையில் என்ன குறை கண்டீர்கள்?
சிபிஐ விசாரணை என்றால், தமிழக காவல்துறை தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கிறதா? எல்லாமே மாநில உரிமை என்று பேசுகிறீர்கள், ஆனால் சிபிஐ அதிகாரிகளுக்கு இரண்டு, மூன்று மூளையா இருக்கிறது?
தமிழக காவல்துறை மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. சிபிஐ மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்றவை எல்லாம் தனித்துச் செயல்படும் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், அவை ஆட்சியாளர்களின் 5 விரல்கள் போலச் செயல்படும். அதனால் அதைப் பேசி பயனில்லை.
இவ்வளவு சிறந்த எங்கள் காவல் படையை அவமதிக்கிறீர்கள். சிபிஐ விசாரணையில் என்ன வந்துவிடப் போகிறது?" என்று கேள்வி எழுப்பினார்.
திமுக மீது குற்றச்சாட்டு
அஜித் குமார் விவகாரத்தில் தமிழக அரசு சிபிஐ விசாரணை கோரியது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த சீமான், "அரசு தனது தோல்வியைத் தான் ஒப்புக்கொள்கிறது. சிபிஐ விசாரணை என்பது காலத்தைக் கடத்தும், திசை திருப்பிவிடும்" என்று விமர்சித்தார்.
மேலும், "சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் மத்திய அரசைக் கை காட்டுகிறது திமுக அரசு. ஆனால் அண்டை மாநிலமான கர்நாடகாவில் பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அளித்து ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துகிறார்கள். எதற்கெடுத்தாலும் மாநில சுய ஆட்சி பேசும் திமுக அரசு எல்லா பிரச்சினைகளுக்கும் மத்திய அரசைக் கை காட்டுகிறது. இது ஒரு தேசிய இன அவமதிப்பு, மாநில அவமதிப்பு, காவல்துறையை அவமதிப்பதாகப் பார்க்கிறேன். நேர்மையானவனுக்கு என்ன பயம், யார் வேண்டுமானாலும் விசாரித்துக்கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டும் தானே?" என்று கேள்வி எழுப்பினார்.
விஜய் விவகாரம் குறித்த கருத்து
கரூர் சம்பவத்தில் இறந்தவர்கள் குறித்துப் பேசிய சீமான், "கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தது கொழுப்பெடுத்துப் போய் இறந்தது. அதேபோல் இது தியாகியைப் பார்க்கச் சென்றோ, சுதந்திரப் போராட்ட வெற்றி கொண்டாட்டத்திற்கோ சென்று உயிரிழந்தவர்கள் இல்லை. இது ஒரு நடிகனைப் பார்க்கப் போய் உயிரிழந்திருக்கிறார்கள். இது விபத்து."
ஆனால், "தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் மக்களின் கிளர்ச்சி, புரட்சியால் ஏற்பட்ட படுகொலை சம்பவம் அது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்குத் திமுக அரசு செய்தது பணி உயர்வு, பணியிட மாற்றம் அளித்ததுதான்" என்று அவர் கூறினார்.
"விஜய் கூட்டத்தில் இறந்தவர்கள் பற்றித் தேர்தலுக்கு ஒரு வருடம் இருந்திருந்தால் பேசியிருக்க மாட்டார்கள். தேர்தலுக்கு நான்கு மாதம் மட்டுமே இருப்பதால் பேசுகிறார்கள். எதையாவது செய்து விஜய்யை பாஜக, அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஒரு சாராரும், அந்தக் கூட்டணிக்கு அவர் சென்றுவிடக் கூடாது என்று மற்றொரு சாராரும் செயல்பட்டு வருகிறார்கள். இதுதான் 10 நாட்களாக நடக்கிறது" என்று சீமான் கூறினார்.