காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பஞ்சகங்கா குளத்தின் காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி பொறுப்பேற்பு மற்றும் சன்னியாசி தீட்சை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்கள், நடிகர் அஜித்திற்கு விருது வழங்கியது குறித்து கேட்டபோது, ஒரு சிறந்த நடிகருக்கு மத்திய அரசாங்கம் விருது வழங்கியுள்ளது. நடிகர் அஜித் மட்டுமல்லாமல் தமிழகத்தில் நான்கு பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
எப்போதும் சுதந்திர போராட்ட வீரர்களாக இருந்தாலும் சரி, தியாகிகளாக இருந்தாலும் சரி, கலைத்துறையில் சாதிப்பவர்களாக இருந்தாலும் சரி அவர்களை நாட்டிற்கு அறிமுகப்படுத்தி பாஜக கட்சியும், பிரதமர் நரேந்திர மோடியும் கௌரவப்படுத்தி வருகின்றனர். அம்பாள் அனுக்கிரகத்தில் காஞ்சி காமாட்சி அம்மன் ஆசிர்வாதத்தில் திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும் என்று கூறினார்.
மேலும், கள்ளக்குறிச்சியில் இளைஞரணி கூட்டத்தில் மது விருந்துக்கும் திமுக-விற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையெனும் திமுக நிர்வாகிகளின் விளக்கம் குறித்த கேள்விக்கு இது தான் திராவிட மாடல் ஆட்சி என பதிலளித்தார்.
தொடர்ந்து, நேற்றுதான் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் நேரில் சந்தித்து விட்டு வந்தேன். இன்று அம்பாளை பார்த்தேன், அடுத்து உங்களை பார்க்கிறேன். நாளை கோட்டையில் அனைவரையும் பார்ப்பேன் என தெரிவித்தார்.