ஆன்மிகம்

Weekly Horoscope: முன்னேற்றம் அடையும் 6 ராசிகள்.. ஜோதிடர் ஷெல்வீ கணிப்பு

Astrologer Shelvi Weekly Horoscope in Tamil: 30.4.2025 முதல் 6.5.2025 வரையிலான ராசிபலன் விவரங்களை யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு.

Weekly Horoscope: முன்னேற்றம் அடையும் 6 ராசிகள்.. ஜோதிடர் ஷெல்வீ கணிப்பு
Astrologer Shelvi Weekly Horoscope in Tamil: 30.4.2025 முதல் 6.5.2025 வரையிலான ராசிபலன் விவரங்களை யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு.

மேஷம்

திறமைக்கும் திட்டமிடலுக்கும் ஏற்ப ஏற்றமும் மாற்றமும் வரக்கூடிய காலகட்டம். புதிய பொறுப்புகள் கூடுதலாக வாய்ப்பு உண்டு. பணி காரணமாக சிலருக்கு வெளிநாடு, வெளியூர் செல்லும் வாய்ப்பு வரும். வீட்டில் விசேஷங்கள் இடம்பிடிக்கும். களியாட்டம் தவிர்த்தா, கைப்பொருள் கரையாம இருக்கும். சிலர் வீடு மாறும் சந்தர்ப்பம் வரலாம். வாரிசுகளால் பெருமை சேரும். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். அரசியல், அரசுத் துறையினருக்கு ஆதரவு நிலைக்கும். வாகனப் பழுதை உடன் சீர் செய்யுங்கள். தொற்றுப் பிரச்னை, அஜீரணம், தூக்கமின்மை உபாதைகளை கவனியுங்கள். இஷ்ட அம்மனைக் கும்பிடுங்கள். எண்ணங்கள் ஈடேறும்.

ரிஷபம்

உழைப்பதில் உறுதியாக இருந்தால் உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும் காலகட்டம். பணியிடத்தில் திட்டமிடலும், நேரம் தவறாமையும் ரொம்பவே அவசியம். குடும்பத்தில் குதர்க்கம் தவிர்க்க வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ப வரவும் இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். செய்யும் தொழிலில் சீரான லாபம் கிட்டும். புதிய முதலீடுகளில் நிதானம் அவசியம். அரசு, அரசியல் துறையினர்க்கு ஆதரவு நிலைக்கும். ஜாமின், ஜவாப் கையெழுத்துகள் போடுவதை இயன்றவரை தவிருங்கள். மூட்டு, நரம்பு, கழுத்து உபாதைகள் வரலாம். தட்சிணாமூர்த்தியைக் கும்பிடுங்கள். வாழ்க்கை தழைக்கும்.

மிதுனம்

அமைதியாகச் செயல்படுவது ஆனந்தத்தை அதிகரிக்கும் காலகட்டம். அலுவலகத்தில் வீண் படபடப்பும் பரபரப்பும் தவிருங்கள். இடமாற்றம் வந்தா, தவிர்க்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள். வீட்டில் ஒற்றுமை உருவாகும். புதிய வரவு, உறவால் மகிழ்ச்சி நிறையும். இளம் வயதினர் பெற்றோருடன் மனம்விட்டுப் பேசுங்கள். வாரிசுகளிடம் கடுமை தவிர்த்து கனிவா பேசுங்கள். வாழ்க்கைத் துணைவர் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுங்கள். சகோதர உறவுகளுடன் சச்சரவு தவிருங்கள். அயல்நாட்டு வர்த்தகம் ஆதாயம் தரும். அரசு, அரசியல் துறையினர், கோப்புகளில் கையெழுத்திடும்போது கவனமாக இருங்கள். வாகனத்தில் வேகம் தவிருங்கள். அடிவயிறு முதல் பாதம் வரையான உறுப்புகளில் பிரச்சனை வரலாம். இஷ்ட மகானைக் கும்பிடுங்கள். வாழ்க்கை மணக்கும்.

கடகம்

தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் காலகட்டம். அலுவலகத்தில் அனுகூலமான சூழல் உருவாகும். உடனிருக்கும் யாரையும் உதாசீனப்படுத்த வேண்டாம். குடும்பத்தில் விசேஷங்கள் வரத்தொடங்கும். உங்கள் பேச்சில் கனிவு இருந்தா சுபகாரியங்கள் கைகூடி வரும். பிறமொழி மனிதர்களிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள். செய்யும் தொழில்ல சீரான வளர்ச்சி உருவாகும். புதிய முதலீடுகளை நேரடியாக செய்ய வேண்டும். அரசு, அரசியல் சார்ந்தவர்கள் பொது இடங்களில் வாக்குறுதிகளில் அலட்சியம் கூடாது. வாகனப் பழுதை உடனுக்குடன் சரி செய்யுங்கள். பற்கள், அஜீரணம், பூச்சிக்கடி, தலைவலி உபாதைகள் வரலாம். சிவன், பார்வதி, முருகனைக் கும்பிடுங்கள். வாழ்க்கை சீராகும் சிறக்கும்.

சிம்மம்

கவனமாகச் செயல்பட்டால், இஷ்டங்கள் ஈடேறும் காலகட்டம். அலுவலகத்தில் உங்க திறமை உணரப்படும். அதேசமயம் நாவடக்கம்தான் நன்மைகளை நிலைக்கச் செய்யும். குடும்பத்தில் இணக்கமான சூழல் உருவாகும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் வேண்டாம். சகோதர உறவுகளால் ஆதாயம் கிட்டும். பூர்வீக சொத்தில் விட்டுக் கொடுத்துப் போறது நல்லது. செய்யும் தொழிலில் சோம்பலுக்கு இடம்தர வேண்டாம். அரசு, அரசியல் துறையினர் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். பயணப்பாதையில் வீண் களியாட்டம் வேண்டாம். பிறர் தரும் உணவு, பானம் தவிருங்கள். காது, மூக்கு, தொண்டை, அல்சர் உபாதைகளில் கவனமாக இருங்கள். பைரவரைக் கும்பிடுங்கள். வாழ்க்கை பசுமையாகும்.

கன்னி

தலைகனத்தைத் தவிர்த்தா, தலை உயர்ந்து நடக்கும் காலகட்டம். அலுவலகத்துல் திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். முகஸ்துதி நபர்களை முதல்வேலையாக விலக்குங்கள். குடும்பத்தில் நிம்மதி வெளிச்சம் நிறையும். தம்பதியரிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். இந்த சமயத்தில் குதர்க்கமும் குத்திக்காட்டலும் வேண்டாம். குடும்பத்தில் மூன்றாம் நபர் தலையீட்டை கனவிலும் அனுமதிக்க வேண்டாம். செய்யும் தொழிலில் சீரான போக்கு நிலவும். அரசு, அரசியல் துறையினர், பொறுமையால் பெருமை பெறலாம். இரவுப் பயணத்தை இயன்ற வரை தவிருங்கள். கழுத்து, தோள்பட்டை உபாதைகள் வரலாம். துர்க்கையை வணங்குங்கள். வாழ்க்கை துளிர்க்கும்.