தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக வாக்கு திருட்டு முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளது என்றும், மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெரம்பலூரில், தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளர் தமிழரசனின் 38-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்வில் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு, தமிழரசனின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு பேசினார்.
வாக்காளர் பட்டியலில் முறைகேடு?
"இந்திய அரசியல் வரலாற்றில் இல்லாத ஒரு அநீதியாக, பாஜகவினர் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகளைச் செய்து வருகின்றனர். பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டபோது, அதில் ஏராளமான தில்லுமுல்லுகள் நடந்துள்ளன. இது தொடர்பாக ராகுல் காந்தி மேற்கொண்ட பயணம் தேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதேபோன்ற வாக்கு திருட்டு முயற்சியில் 2026-ல் தமிழகத்திலும் பாஜக மற்றும் சன் பரிவார் அமைப்புகள் ஈடுபட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, தமிழ்நாட்டு மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டது. தலைமை தேர்தல் ஆணையர் மோடிக்கு வேண்டியவர், அமித் ஷாவுக்கு நெருக்கமானவர். அவர் இருக்கும் வரை தேர்தல் ஆணையம் ஒரு அணியாகவே செயல்படும். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்று அவர் குற்றம்சாட்டினார்.
விலைவாசி உயர்வுக்கு சுங்கக் கட்டணம் உயர்வு காரணம்
"பல சுங்கச்சாவடிகள் காலாவதியாகிவிட்டன. அவற்றையும் மூட வேண்டும். சுங்கக்கட்டணம் மிக அதிகமாக வசூலிக்கப்படுவதால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். விலைவாசி உயர்வுக்கும் இது ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். தொடர்புடைய அமைச்சர் நிதின் கட்கரேயைச் சந்தித்து பேசியிருக்கிறேன். என்னுடைய பேச்சுக்கு பதிலளித்த அமைச்சர், குறிப்பிட்ட சில சுங்கச்சாவடிகள் மூடப்படும் என்று கூட அறிவித்தார். ஆனால், அது நடைமுறைக்கு வரவில்லை. அடுத்த கூட்டத்தொடரில் இந்த பிரச்சனையை நிச்சயம் எழுப்புவோம்" என்று தெரிவித்தார்.
பட்டியலின மக்கள் மீது தாக்குதல் - கண்டனம்
"ஒசூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பட்டியலின மக்கள் கொண்டு சென்றதால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று திண்டுக்கல்லிலும் கலவரம் நடந்துள்ளது. தலித்துகளை இந்துக்கள் என்று பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சன் பரிவார் அமைப்புகள் தொடர்ந்து சொல்லி வருகின்றன. ஆனால், இவ்வாறு தலித்துகள் தாக்கப்படும்போது கண்டும் காணாமல் போல ஒதுங்கிப் போகிறார்கள். பட்டியலினச் சமூகத்தைச் சார்ந்த மக்கள் இது போன்ற சந்தர்ப்பங்களிலாவது உண்மை நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற பட்டியலின மக்களைத் தாக்கிய சாதி வெறியர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.