தருமபுரி மாவட்டம் கடத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த முன்னோடியான கனல் இராமலிங்கம் கடந்த மே மாதம் 12 ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அதனைத் தொடர்ந்து இன்று, வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மறைந்த கனல் இராமலிங்கத்தின் படம் திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது.
இந்த நிகழ்விற்கு தலைமையேற்ற பாமகவின் செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ், தொண்டர்கள் முன் மனமுடைந்து சில விஷயங்களை பேசியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் பாமக நிறுவனர் ராமதாஸ்- அன்புமணி இடையே எழுந்த பிரச்சினை காரணமாக அவரது தலைவர் பதவி பறிக்கப்பட்டது. தனது பதவி பறிக்கப்பட்டது தொடர்பாக தற்போது வரை மன உளைச்சலில் இருப்பதாக அன்புமணி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
மேடையில் பேசிய அன்புமணி, “கடந்த ஒரு மாதமாக பயங்கரமான மன உளைச்சல், தூக்கமில்லை. எனக்குள்ளே பல கேள்விகள். தினமும் நான் கேட்டுக்கிட்டு இருக்கேன். என்ன நான் தப்பு பண்ணேன். ஏன் நான் மாற்றப்பட்டேன். என்னைப் பொறுத்தவரை நான் என்ன தப்பு பண்ணேனு எனக்கு தெரியல. என்னுடைய நோக்கம், லட்சியம், கனவு எல்லாமே நமது அய்யாவோட கனவு,லட்சியம், நோக்கத்தை நிறைவேற்றுவது தான். இவ்வளவு காலமாக அய்யா என்ன சொன்னாரோ அதை செய்து முடித்தவன். இனியும், அய்யா என்ன சொல்கிறாரோ, அதை அய்யாவின் மகனாக, கட்சியின் தலைவனாக நான் செய்து முடிப்பேன். அது என்னுடைய கடமை. நமது சமுதாயம் முன்னேறினால், தமிழ்நாடு முன்னேறும். தனிப்பெரும்பான்மை கொண்ட சமுதாயம் நாம்” என பேசினார்.
சித்திரை முழு நிலவு மாநாட்டிலும் பஞ்சாயத்து:
முதல் முறையாக தனது பதவி பறிக்கப்பட்டது தொடர்பாக வெளிப்படையாக அன்புமணி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ம.க.வில் முகுந்தனால் ஆரம்பித்த பஞ்சாயத்து, அன்புமணியின் தலைவர் பதவியைப் பறிக்கும் அளவிற்கு ஒருக்கட்டத்தில் சென்றது.
கட்சி யார் கண்ட்ரோலில் உள்ளது என தெரியாமல் பாமக நிர்வாகிகள் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ள சூழ்நிலையில், பாமக சார்பில் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஒன்றாக பங்கேற்ற நிலையில், யப்பாடா..பிரச்சினை ஓய்ந்தது போல என பெருமூச்சு விட்ட நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார் ராமதாஸ்.
மைக் ராமதாஸ் பக்கம் வந்ததும் மறைமுகமாக அன்புமணியை சாடி தன் மனதிலிருந்த கருத்துகளை பறக்கவிட்டார். இந்த மாநாட்டிலும் அப்பா – மகன் இடையேயான பிரச்னை மேடையில் வெளிப்பட்டதால் பாமகவினர் கடும் அப்செட்டாகினர். யாரால் இன்று அப்பா – மகனுக்குள் மோதல் உருவானதோ, அதே முகுந்தனை மீண்டும் தூக்கிபிடிக்கத் தொடங்கியுள்ளார் ராமதாஸ் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
மாவட்ட செயலாளர் கூட்டமும்-புறக்கணிப்பும்:
இதனைத் தொடர்ந்து கடந்த மே 16 ஆம் தேதி, பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு டாக்டர் ராமதாஸ் அழைப்பு விடுத்த நிலையில், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தை ராமதாஸின் மகனான அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் கலந்துக் கொள்ளாமல் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.