அரசியல்

2026 தேர்தலில் அதிமுக தலைமையில் ஆட்சி அமையும்- செல்லூர் ராஜு

தேர்தலுக்கு முன்பாக கூட கூட்டணி அமையும், அதெல்லாம் தேர்தல் வியூகம் என்றும், 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என்றும் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் ஆட்சி அமையும்- செல்லூர் ராஜு
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்டபகுதியில் அமைந்துள்ள 25 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை, எஸ்விகே நகரில் அமைந்துள்ள சுற்றுச்சுவர் பூங்கா கட்டுவதற்கு ரூ. 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உண்மையான விடியல் இந்த மேற்கு தொகுதி மக்களுக்கு கிடைத்துள்ளது என்று கூறினார்.

அமைச்சர் பொன்முடி பெண்களை இழிவாக பேசியது குறித்த கேள்விக்கு, பதிலளித்த அவர், அமைச்சர் பொன்முடி எப்போதும் பெண்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் இழிவாக பேசுவதை தொடர்கதையாக வைத்திருக்கிறார்.

பொன்முடி இழிவாக பேசியதற்கு முதன் முதலில் எதிர்த்து பேசியது நான்தான். அமைச்சர் பதவியே ஓசிதான்., அமைச்சர் பதவியை வைத்துக்கொண்டு, அரசாங்க பணத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். மக்கள் படுகிற துயரத்தை முதல்வரிடம் எடுத்துக் கூற ஆளில்லை. மக்கள் கஷ்டம் முதல்வருக்கு லேட்டாக தான் தெரியும் என்று கூறினார். அடுத்த முதல்வர் எடப்பாடி தான் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாகவும் கூறினார்.

நாங்கள் யாரும் VCK கூட்டணியை எதிர்பார்க்கவில்லை., தேர்தலுக்கு முன்பாக கூட கூட்டணி அமையும். அதெல்லாம் தேர்தல் வியூகம், இன்னும் 9 மாதத்தில் தேர்தல் நெருங்க உள்ள நிலையில் திமுகவின் நீட் தேர்வு குறித்த அனைத்து கட்சி கூட்டம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை தான் என்றார். தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நம்பிக்கை எத்தனை தாக்குதல் நடைபெற்று வருகிறது அது குறித்து திருமாவளவன் பேசுறாரா? என்று கேள்வி எழுப்பினார்.

அண்ணாமலை பாஜகவின் தலைமையில் இல்லையென்றால் கூட்டணி அமைக்கலாம் என்ற கருத்து எழுந்து வரும் நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா.? என்ற கேள்விக்கு? நாங்கள் யாரும் அண்ணாமலையை நீக்கவேண்டும் என கூறவில்லை. கூட்டணி குறித்து பொதுச்செயலாளர் தான் அறிவிப்பார் மற்றும் முடிவெடுப்பார். பொதுச்செயலாளர் எங்களை ஆலோசனை செய்யாமல் எதுவும் செய்யமாட்டார் என்றார்.

மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பிரதமரை சந்தித்ததாக இருந்தது குறித்த கேள்விக்கு, ஊடகங்கள் கற்பனை வசனங்கள் எழுதுகிறது. எங்கள் பொது செயலாளர் சொன்னாரா.? நீங்க எல்லாம் கற்பனை ஊடகத்திற்கு போறீங்க என்று கூறினார்.

சங்கர் படம் மாதிரி இந்தியன் ஒன்று வெற்றி பெற்றது. இந்தியன்- 2 பிளாப் ஆன மாதிரி., மதுரையில் EPS-மோடி சந்திப்பு பற்றி ஊடகங்கள் கருத்து பிளாப் ஆனது. ஊடகங்கள் எங்களை பற்றி கற்பனை உலகத்திற்கு செல்கிறது என்றார்.

இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி இல்லை., திமுக ஆட்சியில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டினார். சட்டமன்ற கூட்டத்தில் ஆளும் கட்சி அதிமுக என முதல்வர் பேசியது குறித்த கேள்விக்கு.? தேர்தல் நெருங்க நெருங்க முதல்வருக்கு இன்னும் பதற்றம் அதிகம் ஏற்படும் என்று கூறினார்.

மேற்கு தொகுதி பொன்மேனி பகுதியில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கல்வெட்டு மாற்றப்பட்டு புதிதாக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பெயரில் கல்வெட்டு அமைக்கப்பட்டதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்., தவறுதலாக நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்ததாகவும், இவங்க திமுக ஆட்சியே ஸ்டிக்கர் ஆட்சி தான் என்றும் விமர்சித்தார்.